சவூதி அரேபிய அரசு அந்நாட்டில் பணி புரியும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு விசா வழங்கும் முறையில் புதிய முறையை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் எண்ணற்ற பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.
முன்பு சவூதி அரேபிய அரசு வேலை அடிப்படையில் மருத்துவர்கள் , பொறியியல் வல்லுனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு மட்டுமே விசா வழங்கி வந்தது. இந்நிலையில் தற்போது அந்த விதியை மாற்றி சம்பள அடிப்படையில் குடும்ப விசா வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இதன் காரணமாக பணி மூப்பு அடிப்படையில் அதிக சம்பளம் பெறும் சாதாரண ஊழியர் கூட குடும்ப விசா பெறலாம். இதன் மூலம் எண்ணற்ற ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிகிறது.
0 கருத்துகள்: on "குடும்ப விசா(Family Visa) - சவூதி அரசு புதிய சட்டம்"
கருத்துரையிடுக