நெல்லை: சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி நெல்லை மாவட்டம் பாளையம்கோட்டையில் நேசனல் கான்ஃபிடரேசன் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் ஓர்கனைசேசன் (N.C.H.R.O) சார்பாக மனித உரிமை மாநாடு நடைபெற்றது.
மாலை 6.45 மணியளவில் ராஜா டவரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் N.C.H.R.O தமிழ்நாடு மாநிலப்பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் தலைமையுரையாற்றினார். துணைச்செயலாளர் வழக்கறிஞர் முருகன்குமார் வரவேற்றார். கொக்கோகோலா எதிர்ப்பு கமிட்டி தலைவர் வழக்கறிஞர் தங்கசாமி சிறப்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் எம்.ரஹ்மத்துல்லாஹ்(செயலாளர், N.C.H.R.O தமிழ்நாடு), எஸ்.எம். ரஃபீக் அஹ்மத்(பொருளாளர், S.D.P.I) ஆகியோரும் உரை நிகழ்த்தினர். N.C.H.R.O தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் பொறியாளர் A.செய்யதுஅலி நன்றி நவின்றார்.
கல்லூரி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் இம்மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தமிழ்நாடு NCHRO சார்பாக நடைபெற்ற மனித உரிமை மாநாடு"
கருத்துரையிடுக