2 ஜன., 2010

கர்காரேயின் கவச உடை வாங்கியது சம்பந்தமான ஃபைல்கள் காணாமல் போன விவகாரம்: 8 போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

மும்பை:மும்பை தாக்குதலுக்கிடையே மர்மமான முறையில் கொல்லப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு படைத்தலைவர் ஹேமந்த் கர்காரேயின் புல்லட் புரூஃப் ஜாக்கெட் வாங்கியது சம்பந்தமான ஃபைல்கள் காணாமல்போன விவகாரத்தில் ஐந்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 8 போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் வருகிற திங்கள் கிழமைக்குள் பதில் அளிக்கவேண்டும். 2007 ஆம் ஆண்டு மும்பை போலீஸாருக்காக புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள் வாங்கியதற்கான ஃபைல்கள்தான் காணாமல் போயுள்ளன. இந்த ஜாக்கெட் புரூஃப்கள் குறைந்த தரத்திலிலுள்ளவை என்று ஊழல் தடுப்பு பிரிவு கண்டுபிடித்தது. குறைந்த தரத்திலான புல்லட் புரூஃப் ஜாக்கெட்டுகள் வாங்கியதில் மர்மம் உள்ளது என்று கூறி தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின்படி சமூகசேவகரான சந்தோஷ் தவுண்டுகர் அளித்த மனுவைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில்தான் ஃபைல் காணவில்லை என்பது தெளிவானது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "கர்காரேயின் கவச உடை வாங்கியது சம்பந்தமான ஃபைல்கள் காணாமல் போன விவகாரம்: 8 போலீஸ் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்"

கருத்துரையிடுக