கெய்ரோ:காஸ்ஸாவிற்கு செல்வதற்காக எகிப்திற்கு வந்த பல்வேறு நாடுகளைச் சார்ந்த சமாதான பிரதிநிதிகள் கெய்ரோவில் நடத்திய பேரணியில் காவல்துறை நடத்திய தாக்குதலில் ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டது.
42 நாடுகளைச்சார்ந்த 1300 சமாதான பிரநிதிகள்தான் இதில் கலந்துக்கொண்டனர். ஏற்கனவே காஸ்ஸாவிற்கு செல்லும் இவர்களுடைய முயற்சியை எகிப்து போலீஸ் தடை செய்திருந்தது.
கெய்ரோவில் ஹோட்டலில் தங்கியிருந்த 30 பிரதிநிதிகளை காவல்துறை தடுத்துவைத்ததால் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சாலையில் தடை ஏற்படுத்திய பிரிதிநிதிகளை போலீஸ் பலம்பிரயோகித்து மாற்றியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸா பேரணிக்கு தடை:வன்முறை"
கருத்துரையிடுக