லண்டன்: அமெரிக்காவின் தலைமையில் 2003 ஆம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்ததற்கு ஆதரவு தெரிவித்த பிரிட்டனின் நடவடிக்கையைக் குறித்து விசாரித்து வரும் சில்கோட் கமிஷனின் முன்பு பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ஆஜரானார்.
அப்பொழுது அவர் செப்டம்பர் 11 தாக்குதல்தான் சதாம் ஹுசைனுடனான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்றார். இவ்விசாரணை ஆறு மணி நேரம் வரை நீண்டது. தேவைப்பட்டால் பிளேரை மீண்டும் அழைப்போம் என கமிஷனின் தலைவர் ஜாண் சில்கோட் தெரிவித்தார்.
மிகப்பெரிய அளவில் போர் எதிர்ப்புப் போராட்டங்களையும் புறக்கணித்துதான் பிரிட்டன் 2003 ஆம் ஆண்டு ஈராக் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு துணைபோனது. பேரழிவு ஆயுதங்கள் ஈராக் இல்லை என்பது தெளிவானபின்னரும் பொய்யான புலனாய்வு அறிக்கையின் அடிப்படையில் பிரிட்டன் ஈராக் ஆக்கிரமிப்பை ஆதரித்தது.
ஐ.நா ஆதரவு இல்லாமல் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்துவது சட்ட விரோதமானது என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் கோல்ட் ஸ்மித்தின் உபதேசத்தை புறக்கணித்து அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்புப் போருக்கு டோனி பிளேர் துணை நின்றார்.
பிளேர் கமிஷன் முன்னால் ஆஜரானது நான்காவது தடவையாகும். இதற்கு முன்பு பட்லர். ஹூட்டன், ரகசிய புலனாய்வு பாதுகாப்பு கமிட்டியின் விசாரணை கமிஷன் ஆகியவற்றின் முன்பும் ஆதாரங்களை தெரிவிப்பதற்கு பிளேர் ஆஜரானார். ஆனால் இந்தக் கமிஷன்களெல்லாம் ஈராக் ஆக்கிரமிப்புப் போரை ஆதரித்த பிரிட்டனின் நிலைப்பாட்டைக் குறித்து விசாரித்த கமிஷன்களல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஈராக் ஆக்கிரமிப்பிற்கு காரணம் 9/11 தாக்குதல்: டோனி பிளேர்"
கருத்துரையிடுக