
மும்பை துணை போலீஸ் கமிசனர் பிரகாஷ் வாணி, இன்னொரு துணை போலீஸ் கமிசனர் வி.என்.சால்வே, சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.கே.ஹகாலே, க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ப்ரஃபுல் ஃபத்கே, க்ரைம் ப்ராஞ்ச் துணை சப்-இன்ஸ்பெக்டர் டி.சுலன்கே ஆகியோர்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தைக் குறித்து விசாரணை நடத்த மஹாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார். சோட்டா ராஜனின் முக்கிய கூட்டாளியும் கொலைக்குற்றம் உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட வழக்குகளில் தண்டனைப்பெற்ற டி.கே.ராவ் சிறையிலிருந்து விடுதலைச்செய்யப்பட்ட மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கு கிழக்கு மும்பை செம்பூர் கிளப்பில் ஏற்பாடுச் செய்யப்பட்ட நிகழ்ச்சியில்தான் போலீஸ் அதிகாரிகள் குடித்துவிட்டு அண்டர்வேர்ல்டு கும்பலுடன் நடனமாடியுள்ளனர். இதனுடைய வீடியோ காட்சிகளையும், புகைப்படங்களையும் உள்ளூர் தொலைக்காட்சி சானல் ஒன்று வெளியிட்டுள்ளது.
கிளப்பிலிருந்த க்ளோஸ் சர்க்யூட் டி.வி காட்சிகளிலிருந்து இவர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள் என்பதற்கு தெளிவான ஆதாரம் கிடைத்த நிலையில்தான் இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை என்று மும்பை நகர போலீஸ் கமிசனர் டி.சிவானந்தன் கூறினார்.
சிறையிலிருந்து விடுதலையான சோட்டாராஜனின் கூட்டாளி டி.கே.ராவுடன் சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையான சுனில் போடர், தனாஸா ஆகியோரும் இந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இவ்விருந்துக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தது சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளி போல்ஸன் ஜோசப். மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதாக தகவல் உண்டு. சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள துணை கமிசனர் பிரகாஷ் வாணி இது தனக்கெதிராக பின்னப்பட்ட சதி என்று மறுத்துள்ளார்.
மும்பைத்தாக்குதலின்போது ஏ.டி.எஸ் தலைவர் ஹேமந்த் கர்காரே சோட்டா ராஜன் கும்பலின் உதவியுடன் கொல்லப்பட்டார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சோட்டாராஜன் கும்பலுடன் நடனமாடிய ஐந்து மும்பை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்"
கருத்துரையிடுக