கோபன்ஹேகன்:நபி(ஸல்...)அவர்களை இழிவுப்படுத்தும் நோக்கத்துடன் கார்ட்டூன் வரைந்த டென்மார்க்கைச் சார்ந்த கார்டூனிஸ்ட் கர்ட் வெஸ்டர்கார்டினை வீட்டில் வைத்து கொல்லமுயன்ற நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக டென்மார்க் ரகசிய விசாரணை பிரிவு தலைவர் ஜேக்கப் ஷெர்ஃப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்தொடர்பு இருப்பதாகவும், கிழக்கு ஆப்பிரிக்காவில் சோமாலிய போராளிக்குழுவான அல் சபாபுடனும், அல்காயிதாவுடனும் சம்பந்தப்பட்ட நபருக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
டென்மார்க் நாட்டின் சட்டப்படி கைதுச்செய்யப்பட்ட நபரின் பெயரை வெளியிடக்கூடாது என்பதால் அவருடைய பெயரை போலீஸ் வெளியிடவில்லை. கார்டூனிஸ்டின் வீட்டில் சென்றபொழுது அலாரம் ஒலித்ததால்தான் சம்பந்தப்பட்ட நபரை போலீஸ் கைதுச்செய்ய முடிந்துள்ளது. கைது செய்ய முயற்சி செய்தபொழுது அவர் ஆயுதத்தைக் காட்டியதால் துப்பாக்கியால் சுட்டதாகவும் ஜேக்கப் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "டென்மார்க் கார்டூனிஸ்டை கொல்ல முயன்றவரை துப்பாக்கியால் சுட்டதாக டென்மார்க் போலீஸ் தகவல்"
கருத்துரையிடுக