அபுதாபி:தகவல் தொடர்புத்துறையில் அதிகரித்துவரும் குற்றங்களைத் தடுப்பதற்கு ஐக்கிய அரபு அமீரகம் சைபர் நீதிமன்றங்களை நிர்மாணிக்கிறது.
இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்தைத்தொடர்ந்து இந்தத்துறையில் குற்றவாளிகளை விசாரணைச்செய்து தண்டனை அளிப்பதற்காக இத்தகைய நீதிமன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இதனை அமீரகத்தின் சட்டத்துறை அமைச்சர் டாக்டர் ஹாதிஃப் பின் ஜுஆன் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு இத்தகைய குற்றங்களை தடுப்பதற்கு சிறப்புச்சட்டம் ஒன்றை உருவாக்கியிருந்தது. மிகவும் பயன் தரத்தக்க இத்துறையில் அபாயகரமான முறையில் குற்றவாளிகள் இதனை தவறான முறையில் பயன்படுத்திவருகின்றனர். இந்தத்துறையில் மிகவும் அனுபவமுள்ள ஆராய்ச்சிமேற்க்கொண்டு முனைவர் பட்டம் வாங்கியவர்களே நீதிபதிகளாக நியமிக்கப்படுவர்.
இந்தத்துறையிலிலுள்ள குற்றவாளிகள் சர்வதேச அளவிலான தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு மிரட்டலாக உள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "யு.ஏ.இ யில் சைபர் நீதிமன்றங்கள்"
கருத்துரையிடுக