வாஷிங்டன்:தீவிரவாதத் தொடர்புள்ள தீவிரவாதத்தை ஆதரிக்கின்ற நாடுகள் என குற்றஞ்சாட்டி 14 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்கா செல்லும் முன்பு உடல் பரிசோதனை உள்ளிட்ட கடும் சோதனைக்கு உட்படுத்தவேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
புதிய தீர்மானத்தின் அடிப்படையில் பயணிகளின் உடலின் உட்பகுதிகள் கூட தெரியத்தக்கவகையில் புதிய தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் இச்சோதனை நடத்தப்படும்.
மறைத்துவைக்கப்பட்ட வெடிப்பொருட்களை கண்டறிவதற்காகத்தான் இச்சோதனை என்று கூறப்படுகிறது. ஆனால் 14 நாடுகளின் பட்டியலில் எந்தெந்த நாடுகள் இடம்பெறுகின்றன் என்பதை அமெரிக்க அரசு தெரிவிக்கவில்லை. தீவிரவாத்துடன் தொடர்புடைய நாடுகள் என்று குற்றஞ்சாட்டி கீழ்க்கண்ட 14 நாடுகளை இரண்டு பிரிவாக பிரித்துள்ளதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீவிரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளும் அமெரிக்காவிற்கு ஆதரவான நாடுகளும் இதில் அடங்குகிறது.முதல் பிரிவில் ஈரான், கியூபா, சூடான், சிரியா ஆகிய நாடுகளும், இரண்டாவது பிரிவில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், எமன், சவூதி அரேபியா, சோமாலியா, லிபியா, நைஜீரியா, அல்ஜீரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் அடங்குகின்றன. கிறிஸ்துமஸ் தினத்தில் அமெரிக்க விமானத்தை தகர்க்க திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இந்த நடவடிக்கை எனக்கூறப்படுகிறது.
வான் வழி பயணத்தில் நீண்டகால பாதுகாப்பு நடவடிக்கைக்கு அமெரிக்க தயாராகி வருகிறது. இது 14 நாடுகளுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வருகைத்தரும் பயணிகளல்லாத நாடுகளைச்சார்ந்த பயணிகளுக்கு பாதகமில்லை என்று உயர் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். புதிய பரிசோதனைச்சட்டம் பாரபட்சமுள்ளதென்றும், இந்த நாடுகளின் குடிமக்கள் அனைவரையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சியென்றும் அமெரிக்காவிலிலுள்ள மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "14 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா செல்லும் முன் கடும் உடல் பரிசோதனை"
கருத்துரையிடுக