5 ஜன., 2010

ஹேமந்த் கர்காரே கொலைக்கு காரணம் ஐ.பி. என்பது உறுதி: முன்னாள் ஐ.ஜி

நாக்பூர்:மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தீவிரவாத எதிர்ப்புப்படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்காரே மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது கொல்லப்பட்டதன் பின்னணியிலிருப்பது இந்திய உளவுத்துறையான ஐ.பி யின் கரங்கள் உள்ளன என்று முன்னாள் காவல்துறை ஐ.ஜியான எஸ்.எம்.முஷ்ரிஃப் கூறியுள்ளார்.

கர்காரேயை கொன்றது யார்? என்ற தான் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள் இப்பொழுது தெளிவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாக்பூரிலிலுள்ள தாவந்தே தேசிய கல்லூரியில் உரையாற்றும்பொழுது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது, "மும்பைத் தாக்குதலைக் குறித்து விசாரணை மேற்கொண்ட பிரதான் கமிசன் அளித்த அறிக்கையானது பரிபூரணமில்லாத ஜோடிக்கப்பட்ட அறிக்கையாகும்.ஹிந்துத்துவா சக்திகளின் செயல்பாடுகளை வெளிக்கொண்டுவந்த கர்காரேயை ஒழித்துவிட்டு தங்களது ஆதரவாளரான கெ.பி.ரகுவன்சியை ஏ.டி.எஸ்ஸின் தலைமைப்பதவிக்கு கொண்டுவருவதற்கான சதித்திட்டத்தின் பலன் தான் கர்காரேயின் படுகொலை.

தாஜ், ட்ரைடண்ட் ஹோட்டல்களிலும், சி.எஸ்.டியிலும் நடந்த தாக்குதலுக்கு சமமாகவே காமா மருத்துவமனைக்கு சமீபமாக கர்காரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும். சி.எஸ்.டியிலும், காமா மருத்துவமனைக்கு வெளியேயுள்ள ரங்க் பவன் வீதியிலும் ஒரே சமயம் துப்பாக்கிச்சூடு நடந்ததை கண்ணால் பார்த்த சாட்சிகள் உள்ளிட்ட ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. சி.எஸ்.டியில் தாக்குதல் நடத்தியவர்கள் தான் இத்தாக்குதலையும் நடத்தினார்கள் என்றால் இரண்டு நிகழ்வும் ஒரே சமயத்தில் எவ்வாறு நிகழ முடியும்? காமா மருத்துவமனைக்கு தாக்குதல் நடத்த வந்தவர்கள் மராத்தி மொழியில் பேசினார்கள் என்ற சாட்சிகள் உள்ளிட்ட 11 ஆதாரங்கள் என் வசம் உள்ளது.

ஹிந்துத்துவ பயங்கரவாதத்துடன் தொடர்புடைய முக்கிய அதிகாரிகளின் பெயர்கள் வெளிவருவதை தடுப்பதை ஐ.பி யின் நோக்கம். பிரதான் கமிட்டியுடன் ஐ.பி ஒத்துழைக்கவில்லை. போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் மூலம் நிகழ்ந்த உரையாடலின் பதிவும் கமிட்டிக்கு கிடைக்கவில்லை." இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.எம்.முஷ்ரிஃப் காவல்துறையிலிருந்து சுயமாக ஓய்வுபெற்ற அதிகாரியாவார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "ஹேமந்த் கர்காரே கொலைக்கு காரணம் ஐ.பி. என்பது உறுதி: முன்னாள் ஐ.ஜி"

கருத்துரையிடுக