பாரீஸ்:புர்கா அணிபவருக்கு அபராதம் விதப்பதற்குரிய சட்டம் இயற்றுவதற்கான முயற்சியில் பிரான்சு அரசு தீவிரமுயற்சியில் ஈடுபட்டுள்ளது. புர்கா அணிபவரிடமிருந்து 750யூரோ தண்டமாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஇடங்களில் புர்கா அணிபவரிடமிருந்து தான் இந்த அபாராதம் வசூலிக்கப்படும். பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோசியின் கட்சியான யு.எம்.பியின் தலைவரான ஜீன் பிரான்கோயிஸ் கோபினை மேற்க்கோள்காட்டி டெய்லி மெயில் வெளியிட்டதுதான் இவ்விபரம்.
ஏற்கனவே பிரான்சு அதிபர் நிகோலஸ் சர்கோசி புர்காவிற்கெதிராக பேசியது உலகம் முழுவதும் முஸ்லிம்களுக்கிடையே பெரும் எதிர்ப்பை கிளப்பியது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்: on "புர்கா அல்லது நிகாப் அணிந்தால் அபராதம்: பிரான்சில் சட்டம் வருகிறது"
கருத்துரையிடுக