15 ஜன., 2010

புல்லட் புரூப் ஜாக்கெட் வாங்க பில்டர்களிடம் நன்கொடை

காவல் துறைக்கு புல்லட் புரூப் ஜாக்கெட் வாங்குவதற்காக பில்டர்களிடம் இருந்து, மும்பை போலீஸ் கமிஷனர் டி.சிவானந்தன் நன்கொடை பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதி மன்றத்தின் உத்தரவை அவர் மீறி விட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

மும்பை காவல்துறைக்கு ஏதேனும் வகையில் உதவுமாறு கமிஷனர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, போலீசாருக்கு புல்லட் புரூப் ஜாக்கெட் வாங்குவ தற்காக மும்பை, நவிமும்பை மற்றும் தானே மாவட்டத் தைச் சேர்ந்த பில்டர்கள் சமீபத்தில் ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கினர்.

கமிஷனரிடம் நேரடி யாக நன்கொடையை வழங்காமல், அரசு பட்டியலிட்ட புல்லட் புரூப் ஜாக்கெட் தயாரிக்கும் நிறுவனங்களிடமே நன்கொடை தரப் பட்டது.

என்றாலும்,இந்த விவகாரத்தில் கமிஷனர் சிவானந்தன் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பில்டர்களிடம் இருந்து காவல்துறைக்கு நன் கொடை பெற்றதன் மூலம் அவர், மும்பை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மீறி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கட்டுமானத் தொழில் செய்யும் பில்டர்களின் நிதியுதவியுடன் மும்பை நகரில் கட்டப்பட்ட போ லீஸ் கண்காணிப்பு நிலையங்களை(போலீஸ் சவுக்கி) இடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த 2008ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பில்டர்களின் நிதியுதவியுடன் கட்டப் பட்ட 269 போலீஸ் சவுக்கி களை இடிக்க உத்தரவிட் டது.
தனி நபர்கள் அல்லது அமைப்புகளிடம் இருந்து காவல்துறைக்கு நன் கொடை பெறுவது மோச மான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.
இதற்கிடையே தற்போது, பில்டர்களிடம் இருந்து புல்லட் புரூப் ஜாக் கெட் வாங்குவதற்கு நன் கொடை பெற்றதன் மூலம் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு க்கு எதிராக சிவானந்தன் நடந்து கொண்டதாக குற்ற ச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒய்.பி. சிங் கூறுகையில், “வெளி நபர்களிடம் இருந்து காவல் துறைக்கு நன்கொடை வாங்க சட்டம் அனுமதிக் காது. இது ஒரு மோசமான முன்னுதாரணமாகி விட் டது” என்றார்.
பெயர் குறிப்பிட விரும் பாத முன்னாள் போலீஸ் கமிஷனர் ஒருவர் கூறுகை யில், “புல்லட் புரூப் ஜாக் கெட் என்பது போலீசார் உயிரு டன் சம்மந்தப்பட்டது. தனி நபர்களிடம் இருந்து நன்கொடை பெற்று வாங்கப்படும் புல்லட் புரூப் ஜாக்கெட்டின் தரம் கேள்வியை எழுப்பக் கூடியதாகவே இருக்கும்” என்றார்.
முன்னாள் டிஜிபி எஸ்.எஸ்.விர்க்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஆம்புலன்ஸ், மோட்டார் பைக்குகள் அல்லது ரோந்து படகுகள் போன்றவற்றை நன்கொடை மூலம் வாங்குவதில் தவறில்லை. ஆனால் போலீசாரின் உயிருடன் சம்மந்தப்பட்ட புல்லட் புரூப் ஜாக்கெட்டுகளை நன்கொடை மூலம் வாங்குவது ஏற்கத்தக் கதல்ல.
காவல்துறைக்கு தேவை யான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள் வாங்க தனி நபர்கள் நன்கொடை அளிக்கத் தொடங்கினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும்?” என்றார்.
source:dinakaran

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "புல்லட் புரூப் ஜாக்கெட் வாங்க பில்டர்களிடம் நன்கொடை"

கருத்துரையிடுக