17 ஜன., 2010

பக்ராம் சிறைக்௦ கைதிகளின் பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது

வாஷிங்டன்:ஆப்கானிஸ்தானின் குவாண்டனாமோ என்றழைக்கப்படும் பக்ராம் சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டிருக்கும் 654 சிறைக் கைதிகளின் பெயர் விபரத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

சிறைக் கைதிகளைக் குறித்தும் அவர்களை நடத்திய விதம் குறித்தும் ஆதாரங்கள் வேண்டுமென்று கோரி அமெரிக்காவிலிலுள்ள சிவில் லிபர்டீஸ் யூனியன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின்படி அளித்த மனுவில்தான் இந்தப்பெயர் பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டனர்.

சிறைக் கைதிகளைக் குறித்த முக்கிய விபரங்கள் தற்ப்பொழுதும் முழுமையாக வெளியிடப்படவில்லை என எ.சி.எல்.யு கூறினார். ஏற்கனவே இப்பட்டியலை வெளியிட அமெரிக்கா மறுத்திருந்தது. பக்ராம் சிறைச்சாலையில் நடவடிக்கைகளை ஒளிவு மறைவற்ற முறையில் வெளிக்கொண்டுவருவதற்கான முயற்சியின் ஆரம்ப நடவடிக்கைதான் இது என எ.சி.எல்.யு வின் வழக்கறிஞர் மெலிஸா குட்மான் கூறினார்.

சிறைக்கைதிகள் எவ்வளவு காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், எந்த நாட்டைச் சார்ந்தவர்கள், போர்க்களத்திலிருந்தா அல்லது ஆப்கானிஸ்தானிற்கு வெளியேயிருந்து பிடிக்கப்பட்டவர்களா ஆகிய விபரங்களும் வெளிவரவேண்டியதிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

பக்ராம் சிறைக்கொட்டடியில் 16 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர் என அமெரிக்கா பாதுகாப்புத்துறை வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 செப்டம்பர் வரை பக்ராம் சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 654.

2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது முதல் அமெரிக்க கூட்டுப்படையினர் காபூலின் வடக்கு பகுதியிலிலுள்ள பக்ராம் விமானத்தளத்தை சிறைக்கொட்டடியாக பயன்படுத்தி வருகிறது. இங்கு அடைக்கப்பட்டவர்கள் தாங்கள் கொடூரமான முறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் கூறியிருந்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பக்ராம் சிறைக்௦ கைதிகளின் பெயர் பட்டியலை அமெரிக்கா வெளியிட்டது"

கருத்துரையிடுக