நியூயார்க்:பயணி தவற விட்ட ரூ.95,000 பணத்தை 350 கி.மீ. பயணம் செய்து திரும்ப ஒப்படைத்தார் டாக்சி டிரைவர்.
நியூயார்க்கில் டாக்டருக்கு படிக்கும் வங்கதேச மாணவர் முகுல் அஸாதுஸ்ஸமான். இவர் தனது படிப்புச் செலவுக்காக பகுதி நேர டாக்சி டிரைவராக பணியாற்றுகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது இவரது டாக்சியில் பெலிகா லெட்டரி (72) என்ற இத்தாலிய பாட்டி பயணம் செய்தார்.
டாக்சியில் தனது பர்சை மறந்து வைத்து விட்டு இறங்கிச் சென்றார் பெலிகா. அதில் ரூ.95,000(13000 இத்தாலியன் லிரா) இருந்தது. டாக்சியில் பணத்துடன் பர்ஸ் இருப்பதை பார்த்த அஸாதுஸ்ஸமான், அதில் இருந்த முகவரியில் ஒப்படைக்க டாக்சியை கிளப்பினார்.சுமார் 87 கி.மீ. பயணம் செய்து வீட்டைக் கண்டுபிடித்த முகுலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வீடு பூட்டியிருந்தது. எனினும், போன் நம்பரை கதவில் எழுதிவிட்டு நியூயார்க் திரும்பினார்.
சில மணி நேரத்தில் அவரது போனில் பெலிகா தொடர்பு கொண்டார். உடனடியாக, மீண்டும் அவரது வீட்டுக்கு பணத்துடன் விரைந்தார் முகுல்.
தவற விட்ட பணத்தை 350 கி.மீ. பயணம் செய்து திரும்ப ஒப்படைத்த அஸாதுஸ்ஸமானுக்கு பரிசு அளிக்க விரும்பியும் அதை வாங்க மறுத்தார் அஸாதுஸ்ஸமான். நியூயார்க் போஸ்ட் என்ற பத்திரிகைக்கு இதுத்தொடர்பாக பேட்டியளித்த அஸாதுஸ்ஸமான், "எனது தாயார் நான் 5 வயதாக இருக்கும்பொழுது கூறுவார், ’நேர்மையாளனாக இரு!கடினமாக உழை! நீ வாழ்க்கையில் உயருவாய்!’" என்று தன்னிடம் கூறியதாக அவர் கூறினார்.
source:dailymail,dinakaran
1 கருத்துகள்: on "முஸ்லிம் டாக்சி டிரைவரின் நேர்மை"
alhamdulillah.. Mr.Asaadussamaan you are really gerat person... with regards mohammed saleem
கருத்துரையிடுக