எகிப்தின் முக்கிய எதிர்க்கட்சியும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இஸ்லாமிய இயக்கமுமான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு(இஃவானுல் முஸ்லிமீன்) புதிய தலைவராக முஹம்மது பாதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைவரான முஹம்மது அகஃப்பின் ராஜினாமாவைத் தொடர்ந்தே இந்தத் தேர்வு நடைபெற்றது. எகிப்தின் தெற்கு பகுதி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான முஹம்மது பாதி ஷூரா கவுன்சில் உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முன்னாள் தலைவரான முஹம்மது அகஃப் தெரிவித்தார்.
முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் எகிப்தில் தடைச் செய்யப்பட்டிருந்தாலும் அவ்வியக்கம் கடந்த 2005 ஆம் ஆண்டு எகிப்து பாராளுமன்றத்தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்தி அதில் பெரும்பாலானவற்றில் வெற்றிவாகை சூடியது. எகிப்தின் முக்கிய எதிர்கட்சியாகவும் மாறியது.
முஹம்மது பாதி இஃவானுல் முஸ்லிமீன் இயக்கம் 1928 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதிலிருந்து 8-வது தலைவராவார். 1943 ஆம் ஆண்டு மஹல்லா எல் குப்ரா நகரத்திலுள்ள நைல் டெல்டா பகுதியில் பிறந்தார் முஹம்மது பாதி. முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் பாரா மிலிட்டரி பிரிவின் உறுப்பினர் எனக்குற்றஞ்சாட்டி 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 1960இலிருந்து அனுபவித்தவர் முஹம்மது பாதி. இதற்கு முன்பு இவ்வியக்கத்தின் சித்தாந்த கல்வி(Ideological education) பிரிவின் பொறுப்பை வகித்திருந்தார்.
source:aljazeera
0 கருத்துகள்: on "எகிப்து:முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்கு புதிய தலைவர் முஹம்மது பாதி"
கருத்துரையிடுக