16 ஜன., 2010

தமிழக அரசின் கட்டாய திருமணப்பதிவுச் சட்டத்திற்கு முஸ்லிம் உலமாக்கள் எதிர்ப்பு

கடந்த ஜனவரி 14 ஆம்தேதி வேலூரில் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களின் உயர்மட்ட உறுப்பினர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅத்துல் உலமா ஹிந்த், ஜமாஅத்துல் உலமா, அஹ்லே ஹதீஸ் ஆகிய அமைப்பினர் கலந்துக்கொண்டனர். இந்த கூட்டம் கூட்டப்பட்டதற்கான நோக்கம் சமீபத்தில் தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட கட்டாய திருமண பதிவுச்சட்டம் 2009 என்பதைக் குறித்து விரிவாக கலந்தாலோசிப்பதற்காக.

இக்கூட்டத்திற்கு வாணியம்படி மதரஸா மதீனுல் உலூம் முதல்வர் மவ்லானா வலியுல்லாஹ் சாஹிப் தலைமையேற்றார். முஸ்லிம் தனியார் சட்டவாரிய மவ்லானா அய்யூப் ரஹ்மானி சாஹிப் அவர்கள் இக்கூட்டத்தை வழிநடத்தினார். இக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா A.E.M.அப்துற்றஹ்மான் சாஹிப், ஜம்மியத்துல் உலமாவின் தமிழக பிரிவுத்தலைவர் மவ்லான அஹ்மத் கபீர் சாஹிப், ஜாமிஆ தாருஸ்ஸலாம் முன்னாள் முதல்வர் மவ்லான கலீலுறஹ்மான் ஆஸமி சாஹிப், ஆம்பூர் ஜும்ஆ மஸ்ஜிதின் இமாமும் கதீபுமான மவ்லான முஃப்தி ஸலாஹுத்தீன் சாஹிப், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஷூரா கமிட்டி உறுப்பினர் பட்டேல் முஹம்மது யூசுஃப் ஸாஹிப், முஸ்லீம் லீக் பாராளுமன்ற உறுப்பினர் எம்.அப்துற்றஹ்மான், முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாஷித் ஆகியோருடன் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞானசேகரனும் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், பேரணாம்பட், மேல்விஷாரம், ராணிப்பேட்டை, உமாராபாத், வேலூர் ஆகிய இடங்களைச்சார்ந்த கிட்டத்தட்ட 500 உலமாக்கள், ஜமாஅத் முத்தவல்லிகள், பிரதிநிதிகள், மற்றும் சில பத்திரிகைகளின் செய்தியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இக்கூட்டம் மாலை அஸர் தொழுகைக்குப்பின் துவங்கி இரவு 10 மணிவரை நடந்தது.

இக்கூட்டத்தில் உரைநிகழ்த்திய பலரும் குறிப்பிடுகையில், ’இச்சட்டத்தின் பல பிரிவுகள் சிக்கலானதாகவும் முஸ்லிம் தனியார்ச்சட்டத்தில் தலையிடுவதாகவும் உள்ளது. இது பின்னர் பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான தந்திரமாகும். மக்கள் திருமணத்தை சுமூகமாக நடத்த தடையாக உள்ளது'. என்றனர்.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஞான சேகரன் கூறுகையில், "சட்டமன்றத்தில் இச்சட்டத்தை முன்மொழிந்தபோதே நான் இதனை எதிர்த்தேன். ஏனெனில் மக்கள் இதனை பின்பற்ற இடர்பாடுகள் உள்ளது." என்று குறிப்பிட்டேன் என்றார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இச்சட்டத்திலிருந்து தமிழக அரசு முஸ்லிம் சமூகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்.

திருமணத்தை பதிவுச்செய்வதை பிறப்பு இறப்பை பதிவுச்செய்வது போன்று எளிதாக்கினால் முஸ்லிம் சமூகம் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும்,எவ்வாறெனில் ஜமாஅத்துகளில் பதிவுச் செய்யப்படும் திருமண பதிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி பதிவுச்செய்வதன் மூலம்.

இதே மாதிரியான கூட்டங்கள் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நடத்தப்படும் என்று தெரிகிறது. தமிழகத்தின் பல்வேறு ஜமாஅத்துகளிலிருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கட்டாய திருமண பதிவுச் சட்டத்திலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி கையொப்பமிட்ட மனுக்களை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளனர்.

மவ்லானா வலியுல்லாஹ் சாஹிப் அவர்கள் இதுத்தொடர்பாக twocircles.net என்ற இணையதள இதழுக்கு பேட்டியளிக்கையில், "இந்நாட்டின் அரசியல் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியிருக்கும் உரிமைகளை மீறும் வகையில் இச்சட்டம் உள்ளது. மேலும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் நேரடியாக தலையீடுச் செய்கிறது.ஆதலால் நாங்கள் இதனை எதிர்க்கிறோம் மேலும் இதனை விலக்க கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தில் ஆட்சிச்செய்யும் திராவிட முன்னேற்றக் கழக அரசு முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் என்று நம்புகிறோம். மேலும் இதுத்தொடர்பாக மாநில அளவிலான மாநாடு ஒன்றையும் விரைவில் கூட்ட இருக்கிறோம்." என்றார் அவர்.
source:twocircles.net

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "தமிழக அரசின் கட்டாய திருமணப்பதிவுச் சட்டத்திற்கு முஸ்லிம் உலமாக்கள் எதிர்ப்பு"

கருத்துரையிடுக