பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் முஸ்லிம் ஒருவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியிலிருந்து அண்மையில் விலகிய அமர்சிங் கூறியுள்ளார்.
சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அமர்சிங் அண்மையில் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகினார். இந்நிலையில் மும்பை பீவண்டி சட்டசபைத் தொகுதிக்கு நடைபெறம் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அபூ அஜ்மியின் மகன் பர்ஹான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அமர்சிங், முஸ்லிம்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் வரவேண்டும் என்று கூறினார்.
பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட எந்த தலைவர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஆனால், சீக்கியரான மன்மோகன் சிங் பிரதமர் பதவியேற்ற பின், 1984ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியருக்கு எதிரான கலவரத்திற்கு மன்னிப்புக் கோரினார் என்றும் அமர்சிங் கூறினார்.
source:inneram
0 கருத்துகள்: on "பாபர் மசூதி இடிப்பால் மனம் புண்பட்டுள்ள முஸ்லிம்களை சமாதானப்படுத்த முஸ்லிம் ஒருவர் பிரதமராக வேண்டும்: அமர்சிங்"
கருத்துரையிடுக