25 ஜன., 2010

முஸ்லிம்கள் உலகத்தில் பல்வேறு வகையான ஜிஹாதுகளை நடைமுறைப்படுத்துகிறார்கள்: பிரவீன் தொகாடியாவின் உளறல்

கோழிக்கோடு:முஸ்லிம்கள் உலக முழுவதும் பலவகையான ஜிஹாதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என விசுவஹிந்து பரிசத்தின் சர்வதேச பொதுச்செயலாளர் பிரவீன் தொகாடியா கூறியுள்ளான்.

கோழிக்கோட்டில் பஜ்ரங்தளின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை துவக்கிவைத்தார் பிரவீன் தொகாடியா. மேலும் பிரவீன் தொகாடியா கூறியதாவது: "கேரளத்தில் முஸ்லிம்கள் ஹிந்துக்களை விட கல்வியில் மேம்பட்ட நிலையிலுள்ளனர்.ஒரு முஸ்லிமுக்கு ஒரு மனைவி மட்டும் போதும் என்ற சட்டம் இங்கு கொண்டுவர வேண்டும். நான்கு மனைவிகளும் அவர்களுக்கு 25 பிள்ளைகளும் உள்ள நிலைதான் இங்குள்ளது.

ராமர்கோயில் கட்டுவதற்கான போராட்டத்தைப் போல் இட ஒதுக்கீட்டிற்கெதிராகவும் போராட்டம் அத்தியாவசியமாகும். ஹிந்துக்களின் மகள்களையும் சகோதரிகளையும் இல்லாமலாக்குவதற்கு லவ் ஜிஹாதை கேரளத்தில் முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்." இவ்வாறு பிரவீன் தொகாடியா உரையாற்றினான்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முஸ்லிம்கள் உலகத்தில் பல்வேறு வகையான ஜிஹாதுகளை நடைமுறைப்படுத்துகிறார்கள்: பிரவீன் தொகாடியாவின் உளறல்"

கருத்துரையிடுக