2003 மார்ச்சில் இங்கிலாந்து தொடுத்த இராக் மீதான போர், சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது என அரசாங்க முன்னாள் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
மைக்கல் வூட் என்ற அரசாங்க வழக்கறிஞர் அச்சமயத்தில் வெளிநாட்டுத் தொடர்பான அலுவலகத்தில் ஆலோசகராக இருந்தார். அவருக்குத் துணை ஆலோசகராக இருந்தவர் எலிசபத் வில்ம்ஷுர்ட். இருவரும் அப்போர் சமயத்தில் இந்தப் போர் சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது எனக்கூறி தங்கள் வேலையை ராஜினாமா செய்தனர்.
ஆனால் அதற்கான ஆதாரத்தைக் கடந்த செவ்வாய் (19.01.2010) அன்று வெளியிட்டனர். இந்த இருவரும் அந்தச் சமயத்தில் ஏனைய அதிகாரிகளுடனும் மற்ற அமைச்சர்களுடனும் தங்கள் வாதத்தை முன் வைத்துள்ளனர். ஆனால் அதைப் பொருட் படுத்தாமல் பிரிட்டனுடைய முக்கிய ஆலோசகர் அட்டார்ணி ஜெனரல் லார்ட் பீட்டர் கோல்ட்ஸ்மித் அந்தப் போருக்கான அனுமதி அளித்துள்ளார். மேலும் அவர் தன் மீதான அரசாங்க அழுத்தத்தின் காரணமாகவே அவ்வாறு அனுமதி அளித்தார் என்று கூறப்படுகிறது என தி அப்சார்வர் வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
inneram
0 கருத்துகள்: on "இராக் மீதான போர் சர்வதேச சட்டத்திற்கு புறம்பானது: இங்கிலாந்து வழக்கறிஞர்கள்"
கருத்துரையிடுக