அசாம் ரைபிள்ஸ் 33வது படை தன் கணவரைக் விசாரனைக்கு அழைத்துச் சென்று என்கவுண்டர் செய்து கொன்றுவிட்டதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாவட்டத்தை சேர்த்த தௌபல் கிராமத்தில் வசிக்கும் இவர் தன் கணவனை விசாரிக்க அழைத்து சென்று கொன்று விட்டதாகப் புகார் தெரிவித்துள்ளார். இவருடன் இவரது கிராம மக்களும் சேர்ந்து நீதி கேட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அசாம் ரைபிள்ஸ் 33வது படை, வியாழனன்று பிஷ்பூர் மாவட்டம் மொயரங் காவல் நிலையத்தில் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த போராளியை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றதாகக் கூறி, அவரிடம் இருந்த 9mm பிஸ்டலையும் போலீசிடம் ஒப்படைத்தனர்.
அவ்வாறு கொல்லப்பட்டவர் முஹமது பஜிருதீன் என்றும் அவர் விவசாயம் செய்து வந்தவர் என்றும், தன்னோடும் தன் 3 குழந்தைகளுடனும் உணவு அருந்தி கொண்டுயிருந்தபோது அவரை அசாம் ரைபிள்ஸ் பிரிவினர் வலுக்கட்டயமாக இழுத்து சென்றனர் என்றும் தன் வீட்டிலுள்ள சாமான்களை அடித்து நொறுக்கி, தன் கணவரின் செல்போனையும் எடுத்து சென்று விட்டனர் என்றும் பஜிருத்தீனின் மனைவி கூறியுள்ளார்.
இதனால் அந்தக் கிராம மக்கள் நீதி கிடைக்கும் வரை பந்தில் ஈடுபடபோவதாக கூறியுள்ளனர்.
முஹமது பஜிருதீனின் மனைவி மேலும் கூறும்போது தன் கணவர் எந்த இயக்கத்திலும் இல்லை என்றும் விவசாயம் செய்து அதன் மூலம் தாங்கள் பிழைத்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
இதேபோல தொபல் மாவட்டத்தில் இன்னொரு கிரமாம் ஆன லிலாங் ஹோறபியில் உள்ள மக்களும் தங்கள் கிராம இளைஞர் ஒருவரை அசாம் ரைபிள்ஸ் பிரிவினர் நள்ளிரவில் கைது செய்து அழைத்து சென்றனர். ஆனால் அதன் பிறகு அந்த இளைஞரைப் பற்றி ஏதும் விவரம் இல்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.
அந்த இளைஞர் ஹோறபியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பணியாற்றி வந்தவர். ஆனால் போலிஸ் அப்படி யாரையும் கைது செய்யவில்லை என்று கூறியுள்ளது. கிராம மக்கள் அந்த இளைஞரை காவலில் வைத்து கொன்று இருக்கலாம் என்று கவலை அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்: on "அஸ்ஸாமில் மீண்டும் தலைத்தூக்கும் என்கவுண்டர்"
கருத்துரையிடுக