அங்காரா:ஆப்கான் விவகாரத்தை விவாதிப்பதற்கான சர்வதேச நாடுகளின் மாநாட்டின் முன்னோடியாக ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொள்ளும் உச்சி மாநாடு துருக்கியில் துவங்கியது.
துருக்கி அதிபர் அப்துல்லாஹ் குல்லின் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் ஆப்கான் அதிபர் ஹமீத் கர்ஸாயும், பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியும் பங்கேற்கின்றார்கள். இம்மாநாடு இஸ்தான்புல்லில் மூன்று நாள்கள் நடைபெறும். இம்மாநாட்டில் பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபன்டும்,பாக்.-ஆப்கான் தூதர் ரிச்சார்டு ஹோல்ப்ரூக்கும் பங்கேற்பார்கள்.
நாளை லண்டனில் ஆப்கான் சர்வதேச மாநாடு நடைபெறுகிறது. ஆப்கானில் தற்போதைய அரசியல் சூழலும், அயல் நாட்டுப் படையினரின் பங்கும் விவாதிக்கப்படும் மேலும் ராணுவத்தை வாபஸ் பெறுவது தொடர்பாகவும் விவாதிக்கப்படும்.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளும் இம்மாநாட்டைத் தொடர்ந்து கலந்தாலோசிப்பார்கள்.
பிரிட்டன், அமெரிக்கா மட்டுமல்லாமல் இந்தியா,சீனா, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் இதில் பங்கேற்பார்கள்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஆப்கான் விவகாரம்:ஆசிய நாடுகள் தலைவர்களின் உச்சிமாநாடு துவங்கியது"
கருத்துரையிடுக