26 ஜன., 2010

திருப்பூர் மாவட்ட த மு மு க மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்.

திருப்பூர்- ஜனவரி26 போலீஸ் ஸ்டேஷனில் தமுமுக மாவட்ட தலைவர் தாக்கப்பட்டதாக கூறி, திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனை தமுமுகவினர் நேற்று இரவு முற்றுகையிட்டு மறியல் செய்தனர். விடிய விடிய பதற்றம் நிலவியது.
திருப்பூர், கோம்பைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முஹம்மது யூசுப்(வயது 42) . தமுமுக மாவட்ட தலைவரான இவர் மீது திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷனில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்காக முஹம்மது யூசுப் நேற்று திருப்பூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் வரவழைக்கப்பட்டார்.
எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் இவரை ஏ.டி.எஸ்.பி முருகசாமி மற்றும் பெண் எஸ்.ஜ மல்லிகா ஆகியோர் இவரை கண்முடிதானமாக தாக்கினர்.அப்போது இவர் நான் தமுமுக மாவட்ட தலைவர் என்று கூறியுள்ளார். அதற்கு நீ எவனா இருந்தால் எனக்கு என்ன என்று முருகசாமி கூறியுள்ளார். பிறகு இவரை நிர்வாணப்படுத்தி தாக்க முயற்ச்சித்திருக்கிறர்கள் அதனால் இவர் கதறிகியிருக்கிறார். இவரை மீண்டும் மீண்டும் தாக்கியிருக்கிறார்கள். அப்போது யூசுப் "நான் இப்போது தான் தலையில் ஆபரேஷன் செய்து உள்ளேன். நான் என்ன தவறு செய்தேன் சொல்லுங்கள்". என்று கேட்டுள்ளார். ஆனாலும் இவரை விட்டு விடவில்லை.
பிறகு மாவட்ட தமுமுக, மாவட்ட மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் கிடைக்க உடனே காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர்.
பிறகு உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிந்தவுடன். டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீஸ் அங்கு குவிக்கப்பட்டனர்.போலீசாரை கண்டித்து தாராபுரம் ரோட்டில் தமுமுகவினர் சாலை மறியலும் ஈடுபட்டனர். டி.ஐ.ஜி. பாலநாகதேவி, எஸ்.பி.அருண் ஆகியோர் முற்றுகையிட்டவர்களுடன் பேச்சுவார்தை நடத்தினர்.

தமுமுக மாநில நிர்வாகிகளுடன் உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
பிறகு யூசுப் கோவை மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். முற்றுகை, சாலைமறியலால், விடிய, விடிய பதற்றம் நீடித்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து கோவை, திருப்பூரில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:kovaimediavoice

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "திருப்பூர் மாவட்ட த மு மு க மாவட்ட தலைவர் மீது போலீஸ் தாக்குதல்."

கருத்துரையிடுக