காபூல்:தாலிபான் போராளிகளை ஆஃப்கானிஸ்தான் அரசில் உட்படுத்த ஆதரவாக கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ரோபர்ட் கேட்சிற்கு ஆதரவாக ஐ.நா மூத்த பிரதிநிதியொருவரும் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானிற்கான ஐ.நா சிறப்புத்தூதர் ஈத் என்பவர்தான் தாலிபானின் மூத்த தலைவர்களை ஐ.நா தீவிரவாதப் பட்டியலிலிருந்து நீக்கவேண்டும் என்று நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
இதற்கான கோரிக்கையை ஐ.நா விடம் கோருவதற்கு ஆஃப்கானிஸ்தான் அரசோடும் ஈத் கூறியுள்ளார். தாலிபான்களுடன் நேரடியான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஆஃப்கான் ராணுவ சிறைகளிலுள்ள 750 கைதிகளின் விவகாரத்தில் புனர் பரிசோதனை நடவடிக்கைகளை வேகமாக எடுக்குமாறு அமெரிக்க ராணுவத்திடமும் கோரிக்கை வைத்துள்ளார்.
பயன் தரத்தக்க முடிவு ஏற்பட இது உதவும் என்று ஈத் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. ஐ.நா வின் கறுப்பு பட்டியலில் முல்லா உமர் உட்பட 144 பிரபல தாலிபான் தலைவர்களின் பெயர்கள் உள்ளன. இந்தப் பட்டியலிருந்து மேற்க்கண்ட தலைவர்களின் பெயர்களை நீக்கினாலே தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இயலும்.
தாலிபான்களையும் உட்படுத்தி ஆப்கானிஸ்தானில் அரசை உருவாக்குவதற்கான முயற்சிப்பற்றி கவனத்தில் கொள்ளப்படும் என நேற்று முன் தினம் அமெரிக்க கமாண்டர் மக் கிறிஸ்டல் தெரிவித்திருந்தார். அரசியல் தீர்வை ஆஃப்கானில் தட்டிக்கழிக்க இயலாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் மூத்த உளவுத்துறை அதிகாரிகள் தாலிபான்களுடன் கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சில மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. வருகிற வியாழன் அன்று ஆஃப்கான் விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக கூட்டப்படும் லண்டன் மாநாட்டில் அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் பங்கேற்கின்றன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "மூத்த தாலிபான் தலைவர்களை தீவிரவாதிகள் பட்டியலிருந்து நீக்கவேண்டும்: ஐ.நா பிரதிநிதி"
கருத்துரையிடுக