23 ஜன., 2010

பெயர்களை மாற்றிய எங்களுக்கு மதத்தை மறைத்து வாழ்வது கஷ்டமாக உள்ளது

இந்திய முஸ்லிம்கள் தொழில் பெறும் நோக்கில் தமது பெயர்களை இந்துக்களின் பெயர்கள் போன்று மாற்றிக் கொள்வதாக இந்தியன் எக்ஸ்பிரஸ்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு தமது பெயர்களை மாற்றிய இளைஞர்களை அப்பத்திரிக்கை மேற்கோள் காட்டி இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் திட்ட மிட்டுப் புறக்கணிக்கப்படும் இந்திய முஸ்லிம்களே இவ்வாறான ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் டிசம்பர் 29ல் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கூறுகின்றது.

நாம் முஸ்லிம் என்பது தெரிய வந்தால் எம்மால் வேலைவாய்ப்பை பெற முடியாது என அல்லா ரக்கா கான் எனும் இளைஞன் கூறுகின்றார். இவர் தற்பொழுது தனது பெயரை ஓர் இந்துவின் பெயர் போன்று மாற்றியுள்ளார்.

"நாம் நீண்டகாலமாகேவ இவ் வாறு பெயைர மாற்றிக் கொண்டு தொழில் செய்து வருகிறோம். நாம் தொழில் செய்யும் இடங்களில் எமது உண்மையான முகவரிகளையோ பெயர்கைளேயா வெளிப்படுத்துவைதயிட்டும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றோம்" என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவில் 160 மில்லியன் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்றனர். சமூக, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களில் முற்று முழுதாகப் புறக்கணிக்கப் பட்டிக்கும் இவர்கள் இவ்வாறான நடைமுறைக்கு மாறியிருப்பது ஆச்சரியத்திற்குறியதல்ல. காவல் துறை,இராணுவம், கல்வித் துறைஎன்பவை தொடக்கம் அடிமட்ட வேலைவாய்ப்பைப் பெறுவதும் கூடமுஸ்லிம்கைளப் பொறுத்த மட்டில் பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தியாவிலுள்ள சீக்கியர்கள், கிறிஸ்தவ சிறுபான்மையினர் பெறும் வசதிவாய்ப்புகள் கூட முஸ்லிம்களுக்கு வழங்கப் படவில்லை.

பெயரை மாற்றிய எங்களுக்கு எமது மதத்தை மறைத்து வாழ்வது கஷ்டமாக உள்ளது என தனது பெயரை முகேஷ் என்று மாற்றிய முஸ்தாக் குறிப்பிடுகிறார். இவரது மஹ்மூத் பத்தான் உட்பட முழுக் குடும்பமும் தமது பெயரை இந்துப் பெயர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். இதுபோன்ற நிலை காலப்போக்கில் மதமாற்றத்திற்கு இட்டுச் செல்லுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, இத்தைகய பேயர் மாற்றங்கள் காவல்துறைக்கு தெரிய வருகின்றபோது முஸ்லிம்கள் மீது வீண் சந்தேகம் கொள்வதற்கும் புலனாய்வுத் துறையின் விசாரைணக்கு உட்படவும் வாய்ப்புள்ளது. இது குறித்து தலைமைத்துவங்கள் வழிகாட்ட வேண்டும் என்று இச்செய்தியை மேற்கோள் காட்டி இஸ்லாம் ஆன்லைன் இணையத்தளம் அபிப்பிராயம் தெரிவித்துள்ளது.

இந்திய முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார நிலைமகள் பற்றி காங்கிரஸ் அரசினால் வெளியிடப்பட்ட சச்சார் அறிக்கை தொடர்பிலும் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது குறித்தும் முஸ்லிம்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
source:meelparvai

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பெயர்களை மாற்றிய எங்களுக்கு மதத்தை மறைத்து வாழ்வது கஷ்டமாக உள்ளது"

கருத்துரையிடுக