ஐ.நா:கடந்த ஆண்டு காஸ்ஸா மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத்தாக்குதலின் போது ஐ.நா நிறுவனங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈடு தர இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
நஷ்ட ஈட்டுத்தொகை ஒரு கோடி அமெரிக்க டாலராகும். ஒரு மாதம் நீண்ட இந்த தாக்குதலில் ஐ.நாவின் ஐம்பதிற்குமேற்பட்ட நிவாரணம் வழங்கும் கட்டிடங்கள் தகர்க்கப்படவும் சேதமடையவும் செய்திருந்தன. பத்திற்கு மேற்பட்ட ஐ.நா ஊழியர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இவற்றிற்கான நஷ்ட ஈடுதான் இது என ஐ.நா செய்தித்தொடர்பாளர் மார்டின் நைசர்கி தெரிவித்தார். இதனை ஐ.நா வின் மூத்த இஸ்ரேலிய செய்தித்தொடர்பாளரும் ஒப்புக்கொண்டார்.
ஐ.நா வின் கீழ் செயல்படும் 37 பள்ளிக்கூடங்கள், ஆறு சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் இஸ்ரேலின் தாக்குதலின் போது தகர்க்கப்பட்டிருந்தன. ஜனவரி 15 ஆம்தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அத்தியாவசிய உணவுப்பொருட்களும், சிகிட்சைக்கான உபகரணங்களும் அழிந்துபோயின. சர்வதேச சட்டங்களை புறக்கணித்து வெள்ளை பாஸ்பரஸ் இஸ்ரேல் பயன்படுத்தியதால் ஐ.நா ஊழியர்கள் பலருக்கு காயமும் ஏற்பட்டிருந்தது. இவற்றின் பின்னணியில் இஸ்ரேல் ராணுவம் என்பது பின்னர் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் போராளிகள் ஐ.நா ஸ்தாபனங்களை கேடயமாக பயன்படுத்துவதாக கூறித்தான் இஸ்ரேல் ராணுவம் இந்த நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியது. ஆனால் பின்னர் இது பொய்யென்பதை ஒப்புக்கொண்டது. தகர்க்கப்பட்ட கட்டங்களுக்கு 1 கோடியே 12 லட்சம் டாலர் நஷ்ட ஈடு இஸ்ரேல் மீது விதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அதனை 1 கோடி டாலராக குறைத்ததாக மார்டின் தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸா தாக்குதல்:நஷ்டஈடு செலுத்த இஸ்ரேலுக்கு ஐ.நா உத்தரவு"
கருத்துரையிடுக