லண்டன்:ஹைத்தி பூகம்பம் ஈரானை தாக்குவதற்காக அமெரிக்கா நடத்திய பூமி அதிர்வு ஆயுத பரிசோதனைதான் காரணமென ரஷ்ய இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க கடற்படைதான் பூகம்பத்தை உருவாக்கும் அளவுக்கான ஆயுத பரிசோதனையை நடத்தியதாகவும் இதனை ஈரானில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வெனிசுலா நாட்டின் விவே தொலைக்காட்சி சானலும் ரஷ்ய செய்தி ஏஜன்சியின் இந்தச்செய்தியை மேற்க்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே தெரிவித்ததாகவும் விவே தொலைக்காட்சி கூறுகிறது. ஏற்கனவே இதற்கு சமமான பரிசோதனை ஏற்கனவே பசிபிக் பெருங்கடலிலும் அமெரிக்க நடத்தியதாக அந்த சானல் தெரிவிக்கிறது.
அமெரிக்காவிடம் துயர் துடைப்பு நடவடிக்கைக்கு உதவி கோரும் முன்பே அமெரிக்காவின் தெற்கு பகுதி கமாண்டரான பி.கே.கீன் ஏன் ஹைத்திக்கு வந்து துயர் துடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்றும் அந்த அறிக்கை கேள்வியெழுப்புகிறது.
ஈரானில் இஸ்லாத்தின் பின்னணியில் செயல்படும் ஒரு அரசை கவிழ்ப்பதற்கான முயற்சிதான் அமெரிக்காவின் இந்த பூகம்ப வெடிகுண்டு என கூறப்படுகிறது.
பல்வேறு இயற்கைப்பேரழிவுகளுக்கு காரணமாக க்கூறப்படும் ஹார்ப் என்ற திட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த பரிசோதனை என்றுக் கூறப்படுகிறது. பூகம்பத்தைத்தொடர்ந்து ஹைத்திக்கு நிவாரண உபகரணங்கள் வந்தடையும் முன்பே ராணுவத்தை அனுப்பிய அமெரிக்காவின் நடவடிக்கையும் இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை பிரான்சு, வெனிசுலா, நிகரகுவா ஆகிய நாடுகள் வலுவான கண்டனத்தை பதிவுச்செய்திருந்தன.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹைத்தி பூகம்பம்: அமெரிக்காவின் பூமி அதிர்வு ஆயுத பரிசோதனை காரணமா? ரஷ்ய இணையதளம் தகவல்"
கருத்துரையிடுக