வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் இருப்பது மத சம்பிரதாயத்துக்கு எதிரானதாக கருதும் முஸ்லிம் பெண்கள், ஓட்டு போடாமலே கூட விட்டுவிடலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளான கே.ஜி.பாலகிருஷ்ணனும், தீபக் வர்மாவும் கூறியுள்ளனர்.
அடையாள அட்டைக்காக ஒளிப்படம் எடுக்கும்பொழுது முகத்தை மறைத்துள்ள ஆடையை நீக்குவது குறித்து தேர்தல் கமிசனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அஃஸம்கான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டை நாடினார்.
"முஸ்லிம் சமுதாயத்தில் பெண்கள் பர்தா அணிவதும், முகத்தை மறைக்க ஹிஜாப் அணிவதும் மத சம்பிரதாயம். பர்தா, ஹிஜாப் அணியாத பெண்களை அவர்களின் கணவன் மற்றும் உறவினர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது மத நம்பிக்கை. ஆனால்,புர்கா அணியாமல் முஸ்லிம் பெண்கள் வாக்காளர் அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படங்களை தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு ஊர் முழுவதும் காட்டுகிறது. இந்திய பிரஜைகளுக்கு விருப்பமான மத வழிபாட்டு முறைகளை சுதந்திரமாக பின்பற்ற வழி செய்யும், அரசியல் சட்டப்பிரிவு 25ன் படி தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை தவறானது. எனவே முஸ்லிம் பெண்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும். முஸ்லிம் பெண் வாக்காளர்களை முகத்தை மூடியபடி புகைப்படம் எடுக்கவேண்டும் அல்லது ஹிஜாப் இல்லாமல் எடுக்கும் படத்தை பொது பார்வைக்கு வைக்கக்கூடாது" எனக்குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவில் தீர்ப்பளித்த நீதிபதிகள் உங்களுக்கு இவ்வாறான மதநம்பிக்கை இருந்தால் ஓட்டுப்போடாமலேயே இருந்துவிடலாம். புர்காவை அணிந்துக் கொண்டு ஓட்டுப்போட முடியாது என்றும் அது வாக்காளர்களை அடையாளம் காண தடையாக இருக்கும் எனவும் நீதிபதிகள் கூறினர். சென்னை நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு இடைக்காலத்தடை விதிக்கவேண்டுமென்ற கோரிக்கையையும் நீதிபதிகள் தள்ளுபடிச்செய்தனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "முகத்தை பார்த்துவிடக்கூடாது என்பது மதநம்பிக்கையானால் வாக்களிக்க தேவையில்லை: சுப்ரீம் கோர்ட்"
கருத்துரையிடுக