புதுடெல்லி:வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யக்கூடிய மற்றும் உள்நாட்டில் தயாரிக்கக்கூடிய குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான கடுமையான விஷப்பொருட்கள் அடங்கியிருப்பதாக செண்டர் ஃபார் சயின்ஸ் அண்ட் என்விரான்மெண்ட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
விளையாட்டுப்பொருட்களில் அளவுக்கதிகமாக மெர்க்குரி இனத்தைச் சார்ந்த தாலேட்ஸ்(pthalates) கலந்துள்ளது. சீனா மற்றும் தைவான் விளையாட்டுப் பொருட்கள்தான் மிகவு அபாயகரமானவை. அலர்ஜி, ஆஸ்துமா, எலும்பு சம்பந்தமான நோய்கள், சுவாசக்கோளாறு நோய்கள்,ஆண்கள் இனப்பெருக்க செல்களை பாதித்தல், கர்ப்பமான பெண்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஆகியவற்றிற்கு காரணமான நச்சுப்பொருட்கள் விளையாட்டுப் பொருட்களில் அடங்கியுள்ளது.
மூன்று வயதிற்கு குறைவான வயதுடைய குழந்தைகளைத்தான் இது பெரும்பாலும் பாதிப்பதாக சி.எஸ்.இ இயக்குநர் சுனிதா நாராயண் கூறுகிறார். டெல்லியில் கிடைக்கக்கூடிய விளையாட்டுப்பொருட்களை ஆய்வு செய்ததில் அனுமதிக்கப்பட்டதை விட 45 சதவீதம் அதிகமாக தாலேட்ஸ் கலக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான விளையாட்டுப்பொருட்களில் விஷம் இல்லை என்று எழுதியுள்ளது பொய் என்பதுதான் உண்மை. பொதுவாக விளையாட்டுப் பொருட்களை குழந்தைகள் வாயில் வைத்து கடிப்பார்கள். இதற்காக அப்பொருட்கள் எளிதாக தயாரிக்கப்பட்டிருக்கும். ஆனால் இவை அபாயகரமானது என்று சி.எஸ்.இ அசோசியட் இயக்குநர் சந்திர பூஷன் கூறுகிறார்.
பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட் அனுமதிக்கும் இத்தகைய தரமில்லாத விளையாட்டுப் பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும். பி.ஐ.எஸ் தாலேட்ஸ் பற்றி பரிந்துரைக்காவிட்டாலும் யூரோப்பியன் யூனியன் மற்றும் அமெரிக்காவும் பல வருடங்களுக்கு முன்பே குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் தாலேட்சின் அளவு 0.1 சதவீதத்திற்கு அதிகமாகக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
இந்த ஆய்வின்போது சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் சீனாவிலிருந்து இறக்குமதிச் செய்யப்படும் 57 சதவீத விளையாட்டுப் பொருட்களிலும், தைவானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 100 சதவீத விளையாட்டுப் பொருட்களிலும் நச்சுப்பொருட்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு ஜனவரியில் சீனாவிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதிச் செய்வது தடைச் செய்யப்பட்டிருந்தது. பின்னர் W.T.O வில் இப்பிரச்சனையைக் கொண்டுச் செல்லப்போவதாக சீனா மிரட்டியதனால் தடை நீக்கப்பட்டது. இத்தகைய நச்சுப்பொருட்கள் நிறைந்த விளையாட்டுப் பொருட்கள் அது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்டாலும், உள்நாடுகளில் தயாரிக்கப்பட்டாலும் தடைச் செய்யப்பட வேண்டும் அல்லது கட்டுப்படுத்த வேண்டும் என்று சி.எஸ்.இ சிபாரிசுச்செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களில் அளவுக்கு அதிகமான நச்சுப் பொருட்கள்: ஆய்வில் தகவல்"
கருத்துரையிடுக