துபாய்:2015ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்ததோடு அதனை துபாய்க்கு மாற்றுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடம் தர தயார் என துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இந்த வாய்ப்பு சிங்கப்பூருக்கு இருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் செயல்பட அமெரிக்காவுக்கு விருப்பமில்லாத காரணத்தால் அதனை நியூயார்க்கிலிருந்து மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஆனால் உலக நாடுகளின் தலைமையகமான ஐக்கியநாடுகள் சபைக்கு உலக நாடுகள் அனைத்திற்கு எளிதில் செல்வதற்கான இடமாக இருக்கவேண்டுமென்பது இதன் முக்கிய நோக்கமாகும். ஐக்கியநாடுகள் சபைக்கு தலைமையகம் அமைப்பதற்கான இடத்தை ஒதுக்க தாங்கள் தயார் என்று துபாய் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை துபாய் அரசு மீடியா அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு கூறுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஐ.நா அதிகாரிகளை அழைத்துள்ள துபாய் அரசு தலைமையகத்தை துபாயில் அமைப்பதால் ஏற்படும் சாதகங்களை குறித்து ஐ.நா அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த தயாரென்றும் கூறியுள்ளது.
பூகோள அமைப்பில் துபாய்க்கு நிறைய சிறப்புகள் உண்டு. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எளிதாக சென்றடையக் கூடிய நகரம், உலகத்திலேயே மாநாடு நடத்துவதற்கான இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. சர்வதேச தரத்திலான அடிப்படை வசதி வாய்ப்புகள் நிறைந்த இடமாகவும் துபாய் கருதப்படுகிறது. கடல்வழி, விமான வழி, சாலை வழி போக்குவரத்து வாய்ப்புகள் ஐக்கியநாட்டு சபை போன்ற எப்பொழுதும் பரபரப்பாக இயங்கும் அமைப்பிற்கு ஏற்ற இடமாக துபாய் கருத்தில் கொள்ளப்படுகிறது.
உலக சமாதானத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் ஐ.நா நடத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகத்தான் ஐ.நா வின் தலைமையகத்தை துபாய்க்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் அதிகமான தொடர் பங்களிப்பை உறுதிச்செய்யும் விதமாக ஐ.நா தலைமையகத்தின் இடம் மாற்றம் தங்களுக்கு உதவும் என துபாய் அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் ஐ.நா சபை அமெரிக்காவில் இருப்பதால் செலவுகள் அதிகரித்து அது அமெரிக்கா குடிமகன்கள் மீது வரிச்சுமையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த செய்தி அறிக்கையிலும் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா நாடுகளில் அதிக வசதிகள் உள்ள துபாய்தான் எதிர்காலத்தில் உலகத்தின் தலைமையகமாக சிறந்தது என்றும் "யுனைட்டட் நேசன்ஸ் சிட்டி" துபாய் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஐக்கியநாடுகள் சபை தலைமையகம்: துபாய்க்கு கொண்டுவர முயற்சி"
கருத்துரையிடுக