7 ஜன., 2010

இரண்டு அணுகுண்டு தாக்குதலின் நேரடி சாட்சியான ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர் மரணம்

டோக்கியோ: ஜப்பானில் இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்கா நடத்திய இரண்டு அணுகுண்டு தாக்குதலின் நேரடி சாட்சியான நாகசாகியைச் சார்ந்த ஸுதோமு யமாகுஷி தனது 93-ம் வயதில் மரணமடைந்தார்.

1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி அணுகுண்டு ஹிரோசிமாவில் வீசப்பட்டபொழுது வியாபார விஷயமாக யமாகுஷி ஹிரோசிமாவிற்கு வந்திருந்தார். இதில் தப்பிப்பிழைத்து நாகசாகிக்கு சென்றவர் அங்கும் வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதலுக்கு சாட்சியானார்.

இரண்டு அணுகுண்டு தாக்குதலையும் நேரில் கண்ட ஒரே சாட்சி யமாகுஷி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜப்பான் அரசு இவருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி கெளரவித்தது.

அணுகுண்டு குறித்து புத்தகம் ஒன்றை எழுதிய இவர் இது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உரையும் நிகழ்த்தியுள்ளார். அணுகுண்டு தாக்குதலை குறித்து அதிக விபரங்களை சேகரிப்பதற்கும் திரைப்படம் தயாரிப்பதற்காகவும் கடந்த மாதம் ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் காமரூன் யமாகுஷியை சந்தித்திருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இரண்டு அணுகுண்டு தாக்குதலின் நேரடி சாட்சியான ஜப்பான் நாட்டைச் சார்ந்தவர் மரணம்"

கருத்துரையிடுக