7 ஜன., 2010

இந்திய நகரங்களில் பிளாட்டுகளின் விலை புர்ஜ் கலீஃபாவிலிலுள்ள பிளாட்டுகளை விட அதிகம்

குறைந்த விலையில் சொந்தமாக பிளாட்டுகள் வேண்டுமா? நீங்கள் இந்திய நகரங்களில் அதனை தேடுவதைவிட இன்றைய உலகின் மிகப்பெரிய வானாளாவிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் வாங்குவது சிறந்தது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியின்படி சமீபத்தில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஸ்கைஸ்க்ராப்பரான துபையிலிலுள்ள பர்ஜ் கலீஃபாவில் 100 வது மாடியில் பிளாட் வாங்க ஒரு சதுர அடிக்கு 3,586 திர்ஹம்ஸ்(இந்திய ரூபாய் 45 ஆயிரம்). ஆனால் இந்தியத்தலைநகரான டெல்லியில் பிருத்விராஜ் ரோடு மற்றும் அவ்ரங்கசீப் ரோட்டில் அமைந்துள்ள மார்பிள் ஆர்க் மற்றும் டாடா அபார்ட்மெண்டுகளில் பிளாட் வாங்க சதுர அடிக்கு 65 ஆயிரம் ரூபாய் ஆகிறது (திர்ஹம்ஸ் 5,178).அதே அவரங்கசீப் ரோட்டிலிலுள்ள அன்ஸால் அபார்ட்மெண்டில் ஒரு பிளாட்டிற்கு சதுர அடிக்கு 55 ஆயிரம் ரூபாய் ஆகிறது.(திர்ஹம்ஸ் 4,383). டெல்லி சாணக்யபுரியிலிலுள்ள வசந்த் விகாரில் ஒரு பிளாட்டிற்கு சதுர அடிக்கு 45 ஆயிரம் ரூபாய் ஆகிறது(திர்ஹம்ஸ் 3,586). ரியல் எஸ்டேட் விலைகள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடு என்ற இமேஜை ஏற்படுத்துகிறது.
உலகிலேயே அதிக விலையில்பிளாட்டுகள் விற்பனையாகும் நகரங்களாக டெல்லியும், மும்பையும் திகழ்வதாக கூறுகிறார் உலகின் முன்னணி க்ளோபல் ப்ராபர்டி கன்சல்டன்சி நிறுவனத்தின் சி.பி ரிச்சார்டு ஹில்லிஸ்.

இந்த செய்தியை அஞ்சுமான் என்ற மாத இதழ் வெளியிட்டுள்ளது. மும்பை மற்றும் டெல்லியை கணக்கிடும்பொழுது சென்னை, பெங்களூர் நகரங்களில் இந்த அளவிற்கு பிளாட்டுகளின் விலை அதிகமில்லை என்றபோதிலும் சமீபகாலங்களில் இங்கும் விலை அதிகரித்துதான் வருகிறது.
செய்தி: கல்ஃப் நியூஸ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "இந்திய நகரங்களில் பிளாட்டுகளின் விலை புர்ஜ் கலீஃபாவிலிலுள்ள பிளாட்டுகளை விட அதிகம்"

கருத்துரையிடுக