7 ஜன., 2010

மதத்தை விமர்சிக்கலாம்-அவதூறு கூடாது -நீதிமன்றம்

மும்பை: எந்த மதத்தையும் விமர்சிக்கத் தடை கிடையாது. ஆனால் அவதூறான விமர்சனமோ, துவேஷமான பிரசாரமோ கூடாது, அதை ஏற்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

வழக்கறிஞர் ஆர்.வி.பாசின் என்பவர் 'Islam - A concept of Political World Invasion By Muslims' என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்திற்கு மகாராஷ்டிர அரசு 2007ம் ஆண்டு தடை விதித்தது.

இதை எதிர்த்து பாசின் உயர்நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தடையை உறுதி செய்து உத்தரவிட்டது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், இஸ்லாம் என்றில்லை, எந்த மதத்தையும் விமர்சிக்கலாம். ஆனால் மதத்தை அவதூறு செய்வதோ, ஒட்டுமொத்த மதத்தையும் வில்லன் போல காட்டுவதோ, துவேஷமாக பிரசாரம் செய்வதையோ ஏற்றுக் கொள்ள முடியாது.

திருக்குரானின் பொருளை சரியான முறையில் புரிந்து கொண்டு, அதன் வரலாற்றுத் தன்மையை மனதில் கொண்டு அதுகுறித்து விவாதிக்கலாம். அதேசமயம், அதை தவறான கோணத்தில் விமர்சிக்கவோ, விவாதிக்கவோ கூடாது என்று நீதிபதிகள் கூறினர்.
source:thatstamil

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "மதத்தை விமர்சிக்கலாம்-அவதூறு கூடாது -நீதிமன்றம்"

கருத்துரையிடுக