கோவை:ஜன-6 அன்று சுமார் 4.30 மணியளவில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இந்தியா மாணவர்கள் மீது நடத்தப்படும், இனவெறி தாக்குதலை கண்டித்து கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் செய்யது அலி அசாருத்தீன் தலைமை வகித்தார். கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் துணை தலைவர் டாக்டர். அப்துர் ரஹ்மான் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. 

தீர்மானங்கள்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.
தீர்மானங்கள்
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மற்றும் வேலை செய்யும் இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்.
ஆஸ்திரேலிய அரசு இனவெறி தொடர்பான சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
படுகொலை செய்யப்பட்ட மாணவரின் குடும்பத்திற்க்கு ஆஸ்திரேலிய அரசு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கூறிய தீர்மானங்களை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்துகிறது.

0 கருத்துகள்: on "ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும், இனவெறி தாக்குதலை கண்டித்து கோவையில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டன ஆர்ப்பாட்டம்"
கருத்துரையிடுக