16 ஜன., 2010

'அல்லாஹு அக்பர்' என்ற சொல்லைக் கேட்டால் கடிப்பதற்கு நாய்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரேல்

டெல்அவீவ்:அல்லாஹு அக்பர்(அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று அரப் முஸ்லிம்கள் சொல்வதைக் கேட்டால் அவர்களை தாக்கி கடிப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் நாய்களுக்கு பயிற்சி அளித்துவருகிறது.

அரப் மூவ்மெண்ட் ஃபார் ரினீவல் பார்டியின் தலைவரும் இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினருமான அஹ்மத் திபி இதனை வெளிப்படுத்தியுள்ளார். பாராளுமன்றக் கூட்டத்தின் போது திபி இதனைக் குறித்து கேள்வியெழுப்பினார்.

இத்தகையதொரு பயிற்சி நாய்களுக்கு அளிக்கப்படுகிறதா என்பதைக் குறித்து தெளிவுப்படுத்த வேண்டுமென்றும் அல்லாஹு அக்பர் என்று கூறுவது உங்களை ஏன் பயப்படுத்துகிறது என்றும் திபி இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார்.

இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை முதலில் வெளிக்கொணர்ந்தது இஸ்ரேல் ரேடியோவின் ராணுவச் செய்தியாளர் கார்மேல மினாஷை என்பவர்.

ஏற்கனவே டாக் ஸ்க்வாடின் ப்ளீனம் திருவிழாவில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் பயிற்சிகளை கண்ட ராணுவ வீரர்களின் தாய்மார்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் திபி கூறுகிறார்.

"அல்லாஹு அக்பர்" என்ற வசனத்தை நீங்கள் பயப்படுகின்றீர்களா? நான் உங்கள் அனைவரிடமும் கூறுகிறேன், அல்லாஹுதான் பெரியவன், இங்கு என்னை கடிக்க ஏதேனும் நாய்கள் உண்டா?- ஆவேசத்தோடு கேட்கிறார் திபி.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "'அல்லாஹு அக்பர்' என்ற சொல்லைக் கேட்டால் கடிப்பதற்கு நாய்களுக்கு பயிற்சியளிக்கும் இஸ்ரேல்"

கருத்துரையிடுக