21 ஜன., 2010

முடவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர் சிகிட்சைப் பெற உதவிய ஃபெடர்னிடி ஃபாரம்

அன்ஸார் அஹ்மத்(வயது 35) உத்தரபிரதேச மாநிலம் ஆஸம்கர்ரைச் சார்ந்தவர். சவூதி அரேபியாவில் கண்டாரா பகுதியில் பைத்துல் ஹுஜ்ஜாஜ் என்ற இடத்தில் முடவாதத்தால் தண்டுவடமும், கால்,கைகளும் செயல்படாத நிலையிலிருந்த அன்ஸாரை இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தைச்சார்ந்த உறுப்பினர்கள் அவரை கண்டறிந்து ஜித்தாவிலிலுள்ள தேசிய மருத்துவமனையில் அவசர சிகிட்சைப் பிரிவில் சேர்த்தனர்.

அவரது நிலை கவலைக்கிடமாகயிருந்ததால் அவசரமாக அறுவைசிகிட்சை செய்யவேண்டிய நிர்பந்தம்.அறுவை சிகிட்சைக்கு 40 ஆயிரம் ரியால் செலவு ஆகுமென்றும் உடனடியாக 20 ஆயிரம் ரியால் கட்டினால்தான் ஆபரேசன் செய்யக்கூடிய சூழலில் 20 ஆயிரம் ரியாலை ஃபெடர்னிடி ஃபாரம் பொறுப்பேற்றது.மீதியுள்ள 20 ஆயிரம் ரியாலை இந்திய தூதரகம் வழங்குவதாக உத்திரவாதம் அளித்ததால் ஆபரேசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இந்த நரம்பியல் அறுவை சிகிட்சையை நடத்தி முடித்தவர் நரம்பியல் நிபுணரான டாக்டர்.ஸாலிஹ் பக்கீனி ஆவார். இதனை மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அன்ஸாரின் சிகிட்சைக்கு இந்திய தூதரக அதிகாரி விஜயன் முழுமையான ஒத்துழைப்பை அளித்தார். தற்ப்போது அன்ஸாரின் நிலை திருப்திகரமாக உள்ளது.

அவசர சிகிட்சைப் பிரிவில் இருக்கும் அன்ஸாருக்கு உணவை ஊட்டிக்கொடுப்பது, கழிவறைக்குச் செல்ல உதவுவது உள்ளிட்ட அடிப்படை உதவிகளை ஃபெடர்னிடி ஃபாரம் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். இவர்களுடன் ஷரஃபியா பாலத்திற்கு அடியில் தங்கியிருக்கும் கேரள மாநிலத்தைச் சார்ந்தவர்களும் அன்ஸாருக்கு உதவுகின்றனர்.

அன்ஸார் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து தாயிஃபில் வேலைப்பார்த்து வந்தார் அவரது ஸ்பான்சர் அவரை வேறு வேலைப்பார்க்க கூறிவிட்டதால் வேலைத்தேடி ஜித்தாவுக்கு வந்தவருக்கு கிடைத்த வேலை திருப்திகரமாக இல்லை அவரது அன்றாட தேவைக்காக ட்ராஃபிக் சிக்னல்களில் தண்ணீர் பாட்டில்களை விற்று நாட்களை ஓட்டி வந்த நிலையில்தான் முடவாதத்தால் பாதிக்கப்பட்டார். அன்ஸாருக்கு ஸதருன்னிஷா என்ற மனைவியும், இரண்டுவயது குழந்தையும் உள்ளனர்.
http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=909:paralyzed-indian-recovering-after-neurosurgery&catid=57:news-stories&Itemid=68
செய்தி:Coastaldigest

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "முடவாதத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர் சிகிட்சைப் பெற உதவிய ஃபெடர்னிடி ஃபாரம்"

கருத்துரையிடுக