புதுடெல்லி:உலகின் பாரம்பரிய சின்னங்களில் இடம் பெற்ற ஹிமாயூனின் அடக்கஸ்தலத்திற்கு அருகில் சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்ட அனுமதியளித்த ரயில்வேத்துறைக்கு எதிராக இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை ஆர்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியா(எ.எஸ்.ஐ) வழக்குத்தொடர்ந்துள்ளது.
ஹிமாயூனின் அடக்கஸ்தலத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் விடுதியோடு சேர்ந்துதான் இந்தக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 1958 இல் வரலாற்று நினைவுச்சின்னங்கள் பாதுகாப்புச் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு 100 மீட்டர் சுற்றளவில் எந்தவொரு கட்டிடங்களையும் நிர்மாணிப்பதற்கு அனுமதியில்லை. இந்தச்சட்டத்தை ரெயில்வேத்துறை மீறியதாகக் கூறித்தான் எ.எஸ்.ஐ நிஜாமுதீன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுச்செய்துள்ளது.
ஆனால் ரெயில்வேத்துறை கூறுவதோ இந்த இடம் எ.எஸ்.ஐ யின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொழுதுதான் கோயில் கட்டப்பட்டது என்று. ரெயில்வேத் துறையின் கட்டுப்பாட்டில்தான் அந்த இடம் உள்ளது. ரெயில்வே தொழிலாளிகளுக்கு ஓய்வெடுக்கவும், அவர்களுடைய பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும் இடமில்லாத சூழலில்தான் கோயில் கட்ட ரெயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது என எ.எஸ்.ஐ குற்றஞ்சாட்டுகிறது.
ரெயில்வேயின் வசமுள்ள அவ்விடம் நினைவுச் சின்னத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்கு வருவதால் அதனை தங்கள் வசம் ஒப்படைக்க எ.எஸ்.ஐ கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் ரெயில்வேத் துறையோ அதனை ஒப்படைக்க மறுத்ததோடு கோயில் கட்டவும் அனுமதியளித்துள்ளது. ஒரு சிறிய அறையில் சிலையை நிறுவி ஒரு பூசாரியையும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஹிமாயூனின் அடக்கஸ்தலத்திற்கு அருகிலிலுள்ள மற்றொரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமான நில கும்பாதின் அருகிலும் சட்டவிரோதமான முறையில் கட்டிடப்பணிகளை நடத்தியதாக ரெயில்வேத் துறைக்கெதிராக கடந்த டிசம்பர் 7 ஆம்தேதி இந்திய தொல்லியல் ஆராய்ச்சித்துறை ஒரு வழக்கை பதிவுச்செய்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "ஹிமாயூனின் அடக்கஸ்தலத்திற்கு அருகில் சட்டத்திற்கு புறம்பாக கோயில் கட்ட அனுமதியளித்த ரயில்வேத்துறைக்கு எதிராக வழக்கு"
கருத்துரையிடுக