புதுடெல்லி:தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு (என்.எஸ்.எ) பாராளுமன்றத்தோடு பொறுப்பு இல்லை என்றும் ஆதலால் அப்பதவியை ரத்து செய்யவேண்டுமென்றும் முதன்முதலாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய பிரிஜேஷ் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.
அடல் பிஹாரி வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் 1998 முதல் ஆறு வருடக்காலம் இப்பதவியிலிருந்தவர் பிரிஜேஷ் மிஷ்ரா.பாராளுமன்ற ஜனநாயகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் போன்ற வலுவான பதவியிலிருப்பவர்களுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லை. தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கும், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் பாராளுமன்றத்தோடு பொறுப்புணர்வு வரத்தக்கவிதம் ஒரு சிறப்பு அமைச்சகத்தின் கீழ் இவை கொண்டுவரப்பட வேண்டுமென தான் ஏற்கனவே கூறியிருந்ததாக பிரிஜேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமித்தது அரசியல் தீர்மானமாகும். பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்ததை அக்கட்சி தலைமையிலான ஆட்சி மத்தியில் வந்தபொழுது செயல்படுத்தியதுதான் இப்பதவியென தனது பதவிக்குறித்து பிரிஜேஷ் மிஷ்ரா தெரிவித்தார்.
சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையை மறு கட்டமைப்புச் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதையடுத்துதான் மிஷ்ராவின் இந்த விமர்சனம்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியை ரத்து செய்ய பிரிஜேஷ் மிஷ்ரா கோரிக்கை"
கருத்துரையிடுக