புதுடெல்லி:உளவுத்துறை ஏஜன்சிகளுக்கு சட்டத்திட்டத்தின்பால் பொறுப்புணர்வை ஏற்படுத்துவிதமாக இவர்களுக்காக சிறப்பு பாராளுமன்ற நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டுமென துணை ஜனாதிபதி ஹமீத் அன்ஸாரி கூறியுள்ளார்.
உளவுத்துறை ஏஜன்சிகள் சட்டத் திட்டத்திற்குட்படாததால் அவர்கள் எவருக்கும் பதில் சொல்லவேண்டுமென்ற பொறுப்புணர்வு இல்லை. சமீபத்தில் அவர்கள் தங்களது அதிகாரங்களை ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களிடம் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில்தான் துணை ஜனாதிபதியும் ராஜ்யசபை தலைவருமான ஹமீத் அன்ஸாரியின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் உளவுத்துறை ஏஜன்சிகளுக்கு சட்டத்திற்கு பதில் கூறவேண்டும் என்ற பொறுப்புணர்வு இல்லை என்பது நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடியது அல்ல. எவருக்கும் பதில் கூறத்தேவையில்லை என்பது தனது அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தத்தூண்டும். அமெரிக்கா, பிரிட்டன், போலந்து, நார்வே, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் இத்தகையதொரு கட்டமைப்பு உள்ளது. இந்த முன்மாதிரி இந்தியாவிற்கு தேவை என ஹமீத் அன்ஸாரி கூறுகிறார்.
மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு உளவுத்துறை செய்திகளை ஒரு குறிப்பிட்ட அமைச்சருக்கு மட்டும் அளித்தால் போதாது. தற்ப்போது செயல்பாட்டிலிலுள்ள பாராளுமன்ற நிலைக்குழு இந்த வெற்றிடத்தை நிரப்பாது. தற்போதைய சூழல்களை கணக்கில் கொண்டு உளவுத்துறை நிர்வாகத்தை மறு கட்டமைப்புச் செய்யவேண்டும். உளவுத்துறை ஏஜன்சிகளுக்கிடையில் பரஸ்பர ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என்றும் ஹமீத் அன்ஸாரி சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் உளவுத்துறை ஏஜன்சிகள் அவர்களுடைய நோக்கம், பார்வை, பின்பற்றவேண்டிய கொள்கைகள் ஆகியவற்றை பகிரங்கப்படுத்த வேண்டும். தற்காலிக விஷயத்தில் சர்ச்சைகள் செய்யப்பட வேண்டும். இந்த பிரச்சனையில் ஜெர்மன் நாட்டின் நடைமுறை முன்மாதிரியாகக் கொள்ளல்வேண்டும். உளவுத்துறை ஏஜன்சியின் பொருளாதார விஷயத்தில் பிரிட்டனை முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும். உளவுத்துறை விவகாரத்தில் மனித உரிமைக்கு முன்னுரிமை வழங்கும் நார்வே நாட்டின் முன்மாதிரி தேவை.
இந்த நாடுகளிலிலுள்ள உளவுத்துறை கட்டமைப்பைக்குறித்து ஆய்வுச்செய்து அதில் பொருத்தமானவற்றை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். உளவுத்துறை ஏஜன்சிகளின் செயல்பாடுகள் அதிகமாக விசாலமானதாக இருக்கவேண்டும் பழையகாலத்தைப் போன்ற அரசியல்-ராணுவ கட்டமைப்பைப் போல் இருக்கக்கூடாது என்றும் தேச, சமூக, சூழல் இம்மூன்றையும் அடிப்படையாகக்கொண்டிருக்க வேண்டுமென்றும் அன்ஸாரி தெரிவித்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "உளவுத்துறை ஏஜன்சிகளின் செயல்பாடுகளை பாராளுமன்ற அதிகார எல்லைக்குள் கொண்டுவரவேண்டும்: துணை ஜனாதிபதி"
கருத்துரையிடுக