கஷ்மீர்:லால்சவுக்கில் சி.ஆர்.பி.எஃப் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் 17 வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கஷ்மீரில் போராட்டம் தொடர்கிறது.
இதற்கிடையே லால்சவுக் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தால்கேட்டைச்சார்ந்த கான் நேற்று மரணமடைந்தார்.பல இடங்களிலும் போராட்டக்காரர்களை கலைந்துச்செல்ல போலீஸ் கண்ணீர் குண்டை பயன்படுத்தியது.மேலும் போராட்டக்காரர்கள் மீது லாத்திசார்ஜும் நடத்தியது.இதில் ஏழு பேருக்கு காயம் ஏற்பட்டது. போலீசுக்கெதிராக பல இடங்களிலும் கல்வீச்சு நடந்தது.போலீஸ் தரப்பில் கூறப்படும்பொழுது இந்த மரணத்தைப்பற்றி விசாரித்து வருவதாக கூறினர்.
செய்தி:தேஜஸ்
0 கருத்துகள்: on "கஷ்மீரில் போராட்டம் தொடர்கிறது: குண்டடிப்பட்ட மேலும் ஒருவர் மரணம்"
கருத்துரையிடுக