காபூல்:ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்காவின் வெஞ்சிறையான பக்ராமில் அடைக்கப்பட்டிருந்து கைதிகள் மூன்றுபேர் தங்களது சட்டத்திற்கு புறம்பான சிறைவாசத்தை கேள்விக்கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
எமன் நாட்டைச் சார்ந்த ஃபாதி அல் முஹல்லா, அமீன் அல் பாகரி, துனீசியாவைச் சார்ந்த ரதா அல் நஜர் ஆகியோர்தான் வாஷிங்டன் நீதிமன்றத்தில் இம்மனுவை தாக்கல்செய்துள்ளனர். இவர்கள் தாக்கல் செய்துள்ள மனுமீதான விசாரணை துவங்கியதாக அமெரிக்க சட்டத்துறை செய்தித்தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
குவாண்டனாமோ சிறைக்கைதிகளுக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை பக்ராம் சிறைக்கைதிகளும் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டனர். மனித உரிமை ஊழியரான டிவோன் ஷாஃப்தான் இச்சிறைக் கைதிகளின் வழக்கறிஞர்.
500 பேர்க்கொண்ட பக்ராம் சிறையிலிருந்து இது முதன்முதலாக தங்களது சிறைவாசத்தை கேள்வி எழுப்பி கைதிகள் மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குற்றம் என்னவென்று அறியாமல் இவர்கள் 6 வருடங்களாக சிறைக் கொட்டடிகளில் வாடி வருகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "பக்ராம் சிறைக்கைதிகள் அமெரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல்"
கருத்துரையிடுக