காபூல்:ஆப்கானிஸ்தானில் அப்பாவி குடிமக்களை சுட்டுக்கொன்ற வழக்கில் அமெரிக்க தனியார் பாதுகாப்பு ஏஜன்சியான பிளாக் வாட்டரின் இரண்டு முன்னாள் அதிகாரிகளான ஜெஸ்டின் கானன், கிறிஸ் ட்ரோட்லஃப் ஆகியோர் கைதுச்செய்யப்பட்டனர்.
கடந்த வருடம் மே மாதம் 5 ஆம் தேதிதான் ஆப்கான் குடிமக்களை இவர்கள் அநியாயமாக சுட்டுக்கொன்றனர்.ஆப்கான் தெருவில் சென்றுக்கொண்டிருந்த கார் மீது இவர்கள் அநீதமான முறையில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் மரணமடைந்தனர். ஒருவருக்கு கடும் காயம் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையிலிருந்தார்.
பராவந்த் ராணுவதளத்தில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்த பிளாக் வாட்டரைச்சார்ந்த இருவரும் ஆப்கானிஸ்தான் படையினருக்கு பயிற்சியளிக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் 14 சிவிலியன்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வழக்கில் பிளாக் வாட்டரின் 5 வீரர்கள் விசாரணையை சந்தித்துவருகின்றனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சிவிலியன்கள் படுகொலை: இரண்டு பிளாக் வாட்டர் படைவீரர்கள் கைது"
கருத்துரையிடுக