காஸ்ஸா சிட்டி:காஸ்ஸாவில் இஸ்ரேல் படை நடத்திய விமானத் தாக்குதலில் 3 ஃபலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
எகிப்தின் எல்லையிலிலுள்ள சுரங்கங்கள் மீதுதான் முதலில் தாக்குதல் நடைபெற்றது. காஸ்ஸா சிட்டியிலும், கான் யூனுஸ் மகாணத்திலும் ஏழுமுறை ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.
எகிப்தின் எல்லையிலிலுள்ள சுரங்கங்கள் மீதுதான் முதலில் தாக்குதல் நடைபெற்றது. காஸ்ஸா சிட்டியிலும், கான் யூனுஸ் மகாணத்திலும் ஏழுமுறை ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றனர்.
தாக்குதலில் ஏராளமான கட்டிடங்கள் தகர்ந்துள்ளன. ஆள் சேதம் பற்றி தகவல்கள் கிடைக்கவில்லை. காஸ்ஸாவில் ஆயுதக்கிடங்கிற்கு நேராக தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. கடந்த ஒருவாரமாக காஸ்ஸாவின் பல பாகங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திவருகிறது.
இதற்கிடையே யுத்தத்திற்கு தயாராவதற்கான முன்னறிவிப்புகளுடனான பிரசுரங்களை இஸ்ரேலிய விமானங்கள் மீண்டும் வீசின. எல்லையில் எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் எனவும் 300 மீட்டர் சுற்றளவிலிருந்து வெளியேறிடவேண்டும் என்று கூறும் அரபியிலான பிரசுரங்களைத்தான் விமானங்கள் வீசின.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் இஸ்ரேல் தாக்குதல் 3 ஃபலஸ்தீனர்கள் படுகொலை"
கருத்துரையிடுக