சேதுசமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி, திராவிடர் கழகம் சார்பில் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, திருவாடானை பகுதியில் பிரச்சாரபயணம் நடைபெற்று வருகிறது.நேற்று மாலை தொண்டி பஸ் ஸ்டாண்ட் எதிரில், திராவிடர் கழகத்தினர் மேடைபோட்டு பேசிகொண்டிருந்தனர்.
இந்து மதத்தின் பெயரால் சேதுக்கால்வாய் திட்டத்தை தடுப்பதை கேலியாக விமர்சனம் செய்ததால், ஆர்.எஸ்.எஸைச் சேர்ந்தவர்கள் கும்பலாச் சென்று பேச்சை நிறுத்தும்படி மிரட்டி ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் பதட்ட நிலை ஏற்பட்டது. பிரச்சாரக் கூட்டம் பாதியோடு நிறுத்தபட்டது. ஆர்.எஸ்.எஸ். சார்பில் தொண்டி போலீசில் தி.க.வினர்மீது புகார் செய்யபட்டது. அதன்படி போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.
source:inneram
0 கருத்துகள்: on "சேதுசமுத்திரதிட்டத்தை நிறைவேற்ற கோரி, திராவிடர் கழகம் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ரகளை"
கருத்துரையிடுக