
மேலும் அதிபர் ஷேக் கலீபா பின் ஜைத் புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும், புதிய சட்ட விதிமுறைகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்போர் மற்றும் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு புகையிலைப் பொருட்களை விற்போருக்கு 1.2 கோடி ரூபாய் வரை அபராதமும், குறைந்த பட்சம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
மேலும், புகையிலைப் பொருட்களை விற்பதற்கு வழங்கப்பட்ட உரிமமும் ரத்து செய்யப்படும். கபே போன்ற இடங்களில் புகையிலைப் பொருட்களை விற்பதற்கு உரிமம் அளிக்கப்படாது. 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இருக்கும் காருக்குள், மற்றவர்கள் புகைபிடிப்பதும் குற்றமாக கருதப்படும். அதேபோல், புகையிலைப் பொருட்கள் தொடர்பான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்படும். இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.
0 கருத்துகள்: on "U.A.Eல் புகை பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்ககள் விற்பனை செய்வதில் கட்டுப்பாடுகள்.மீறினால் 1.2 கோடி அபராதம்"
கருத்துரையிடுக