டெல்அவீவ்:காஸ்ஸாவில் இஸ்ரேலால் ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கலந்துக்கொண்ட பேரணி இஸ்ரேலின் தலைநகரான டெல் அவீவில் நடைபெற்றது.இதில் யூதர்களுடன் அரபுக்களும் கலந்துக்கொண்டனர்.
காஸ்ஸாவில் சுதந்திரமும் நீதியும் அனுமதிக்கவேண்டுமென்று போராட்டக்காரர்கள் இஸ்ரேலுக்கு கோரிக்கை விடுத்தனர். 2007-ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் ஏற்படுத்திய தடைமூலம் காஸ்ஸா மக்கள் துயரத்தில் சிக்கியுள்ளனர் என்றும் தடையைத் தொடர்வது மற்றொரு போர்குற்றமென்றும் அவர்கள் கூறினர்.
இதேவேளையில் காஸ்ஸாவின் எராஸ் எல்லையில் சர்வதேச சமாதான பிரதிநிதிகள் பேரணியொன்றை நடத்தினர். தடையை நீக்கவும், காஸ்ஸாவிற்குள் செல்ல அனுமதிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். காஸ்ஸாவிற்கு செல்வதற்காக 1,300 சர்வதேச சமாதான பிரதிநிதிகள் கெய்ரோவில் தங்கியுள்ளனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "காஸ்ஸாவில் தடையை நீக்கக்கோரி இஸ்ரேலில் பிரம்மாண்ட பேரணி"
கருத்துரையிடுக