லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நாங்களும் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக போர்புரிவோம் என லெபனானில் ஹமாஸின் அரசியல் பிரதிநிதி அலி பராகா கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது, "நாங்கள் இங்கு(லெபனானில்)விருந்தாளியாகவே தங்கியுள்ளோம் ஆனால் எங்கள் கோட்பாட்டில் எந்த மாற்றமுமில்லை. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தும்பொழுது எங்கள் கைகள் விலங்கிடப்படாது. எங்கள் சகோதரர்களுடன் இணைந்து நாங்களும் போராடுவோம். இஸ்ரேலை துரத்துவோம்." என்றார் அவர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குபகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு ஹமாஸ் உறுப்பினர்களின் நினைவுதினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதுதான் அலி பராக்கா இதனை தெரிவித்தார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜுலையில் துவங்கி 33 நாள்கள் நடந்த இஸ்ரேல்-ஹிஸ்புல்லாஹ் போரில் சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். 10 லட்சம் லெபனான் மக்களும், 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் வரையிலான இஸ்ரேலியர்களும் இடமாற்றப்பட்டனர்.ஹிஸ்புல்லாஹ்வின் பலத்தை அழிப்பேன் என்று சபதமிட்டு தாக்குதல் நடத்திய யஹூத் ஓல்மர்ட்டின் திட்டம் தவிடுபொடியானதுதான் மிச்சம்.வேறு எந்த பயனும் விளையவில்லை.
செய்தி:Presstv
செய்தி:Presstv
0 கருத்துகள்: on "லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து நாங்களும் போர்புரிவோம் -ஹமாஸ்"
கருத்துரையிடுக