பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கரீபியன் நாடான ஹைத்தியில் 33 குழந்தைகளை கடத்திச் செல்ல முயன்ற 10 அமெரிக்கர்களை ஹைத்தி போலீஸ் கைதுச் செய்தது.
இடாஹொ என்ற இடத்தை மையமாகக்கொண்டு செயல்படும் நியூ லைஃப் சில்ட்ரன்ஸ் ரெஃப்யூஜ் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் தான் கைதுச் செய்யப்பட்டவர்கள். ஆனால் கைதுச்செய்யப்பட்டவர்களில் உட்பட்ட ஒரு பெண்மணி கூறுகையில், "நாங்கள் தவறாக எதுவும் செய்யவில்லை' என்று குறிப்பிட்டார்.
ஹைத்தியின் முக்கிய எல்லையான மல்பாஸ்ஸேயிலிருந்து டொமினிக்கன் ரிபப்ளிக்கை கடக்க முயன்றபொழுது தான் இவர்கள் கைதுச் செய்யப்பட்டனர். ஹைத்தி போலீஸ் இப்பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறது. ஹைத்தி அதிகாரிகள் தெரிவிக்கையில் இவர்கள் 2 மாதத்திலிருந்து 12 வயதான குழந்தைகளை தத்தெடுத்ததற்கான எந்த ஆவணமும் இவர்களிடமில்லை. மேலும் அந்தக்குழந்தைகள் அநாதைகள்தானா என்பதற்கான தெளிவுமில்லை என்று கூறுகிறார்கள்.
சட்டப்படி இயங்கும் நிவாரணக்குழுக்கள் குழந்தைகளின் பெற்றோர்களை கண்டுபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்த பிறகு அவர்கள் அநாதைகள்தான் என்பது உறுதியானால்தான் தத்தெடுக்க அனுமதிக்கப்படுவர். ஹைத்தி அரசு பல்வேறு வகையான தத்தெடுத்தலை இம்மாதம் துவக்கத்தில் தடைச்செய்திருந்தது.
source:presstv
0 கருத்துகள்: on "ஹைத்தி: குழந்தைகளை கடத்த முயன்ற அமெரிக்கர்கள் கைது"
கருத்துரையிடுக