26 ஜன., 2010

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக போலீசார் கடும் வாக்குவாதம் கோவையில் பதற்றம் போலீஸ் குவிப்பு ..

கோவை,ஜனவரி, 22கோவை உக்கடத்தில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும்,போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்றபட்டது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக வருகிற பிப்ரவரி மாதம் 20-21ம் தேதிகளில் மதுரையில் நடத்தும் சமூக எழுச்சி மாநாட்டையொட்டி கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக பிச்சார பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. ஆனாலும் தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றன. பொதுக்கூட்டம் மேடையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா மற்றும் நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடை அருகே வந்தனர். தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர்கள் குமாரசாமி,பாலாஜி சரவணன், முத்துராஜ், தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளிடம் இங்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றும், எனவே தடையை மீறி பொதுக்கூட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள். என்றும் போலீஸார் தெரிவித்தனர். இதானால் போலீசாருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
இதற்கிடையில் சில நிர்வாகிகள் திடீரென்று பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசத் தொடங்கினார்கள். இதனால் பிரச்சினை பெரிதானது. இந்த பிரச்சினை பற்றி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் கோவை தெற்கு தாசில்தார் சுப்பிரமணியம் அங்கு வந்தார். அவர் பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தாரிடம் கூட்டத்தில் கொள்கைகளை மட்டுமே விளக்கி பேசுவோம் என்று நிர்வாகிகள் உறுதி அளித்தன் பேரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து கூட்டம் சுமுகமாக நடைபெற்றது. இதையடுத்து அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசாரும் வாபஸ் பெறப்பட்டனர். இந்த சம்பவத்தால் கோவை உக்கடம், கோட்டை மேடு, நகரம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதே பகுதிக்கு காலையில் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் அதலால் கோவையில் எங்கு பார்தாலும் போலீஸ் தொப்பிகளாக தெரிந்தது. பரபரப்பு ஏற்பட்டது.
மேடையில் மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா பேசியதாவது:-
நம் தேசத்தின் வளர்ச்சியில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய பங்கீடு வழங்கப்பட வேண்டும். மேலும் சுதந்திர, நீதி. பாதுகாப்பு இவையணைத்தும் அனைத்து சமூக மக்களுக்கும் பரிபூரணமாக கிடைக்கப் பெற வேண்டும். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே அந்த வளர்ச்சி சொந்தமாகிக் கொண்டிருக்கிறது. இந்திய குடிமக்களின் முக்கிய சமூகங்களான முஸ்லிம், தலித்துகள், பழங்குடியினர், ஆதிவாசியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தபட்ட வகுப்பினர் ஆகியோர் தேசத்தின் வளர்ச்சியில் புறக்கணிக்கபடுகின்றனர். வஞ்சிக்கப்படும் சமூகங்களில் முதலிடத்தில் இருப்பது முஸ்லிம் சமூகமே. ஆகவே அனைத்து சமூகங்களும் எழுச்சி பெற வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக எழுச்சி மாநாட்டை நடத்த முன் வந்துள்ளது.ஆகவே சமுதாய கண்மணிகள் அனைவரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு ஒற்றிணைவோம் ! சக்தி பெறுவோம் !! என்று உரைநிகழ்தினர்.
இந்த பிரச்சார பொதுக் கூட்டம் மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில் நடந்தது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி மாநில தலைவர் கே. எம். ஷரீஃப். பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா கேரளா மாநில தலைவர் நஸ்ருதீன், எஸ்.டி.பி.ஜ.யின் மாநில துனைதலைவர் அப்துல் ஹமீது. பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் ஹமீது ஆகியோர் உரைநிகழ்தினார்கள். முடிவில் முஸ்தபா நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது .இதில் 1500பேர் கலந்து கொண்டார்கள்.

source:mediavoice


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 கருத்துகள்: on "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாக போலீசார் கடும் வாக்குவாதம் கோவையில் பதற்றம் போலீஸ் குவிப்பு .."

கருத்துரையிடுக