ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்து தேர்தலில் சவாய் மடாய்பூர் மாவட்டத்திலிலுள்ள சன் பஞ்சாயத்தில் சர்பான்ச் பதவிக்கு(நம்மவூர் கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு சமம்) போட்டியிட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர் முஹம்மது ஹனீஃப் வெற்றிப் பெற்றுள்ளார்.
1960 ஆம் ஆண்டு இக்ராமுத்தீன் காழிக்கு பிறகு வெற்றிப் பெற்றுள்ள ஒரே முஸ்லிம் வேட்பாளர் முஹம்மது ஹனீஃப் ஆவார். 1960 க்கு பிறகு இத்தொகுதியில் இதுவரை மீனா, குஜ்ஜார் இனத்தைச்சார்ந்த வேட்பாளர்களே வெற்றிப் பெற்று வந்தனர்.
இத்தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் முஹம்மது ஹனீஃபுக்கு 2448 வாக்குகள் கிடைத்தன. பா.ஜ.க வைச்சார்ந்த கம்லேஷ் 1224 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இத்தொகுதியில் 1700 முஸ்லிம் வாக்குகள் தான் பதிவாகியுள்ளன. அவ்வாறெனில் ஹனீஃப்க்கு கிடைத்த அதிகமான வாக்குகள் இதர மதத்தைச் சார்ந்த மக்களிடமிருந்து கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி ராஜஸ்தானில் மாற்று மத மக்களிடமும் செல்வாக்கு பெற்று வருவதையே இந்த தேர்தல் முடிவு சுட்டிக்காட்டுகிறது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 கருத்துகள்: on "சோசியல் டெமோக்ரேடிக் பார்டிக்கு முதல் வெற்றி"
கருத்துரையிடுக