9 பிப்., 2010

மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு

கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உட்பட்ட முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மேற்கு வங்காள அரசு முடிவெடுத்துள்ளது.
கல்வி,பொருளாதாரம்,சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களுக்குத்தான் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கரை லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் உள்ள முஸ்லிம்கள் இந்தப்பிரிவில் இல்லை. முஸ்லிம்களில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களின் மேம்பாட்டிற்காக ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அளித்துள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த மேற்குவங்காள அரசு தீர்மானித்துள்ளதாக முதல் அமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

"மத்திய அரசு மிஷ்ரா கமிஷனை நடைமுறைப்படுத்துமா என்பது எங்களுக்கு தெரியாது ஆனாலும் நாங்கள் அதனை நடைமுறைப்படுத்துகிறோம்" என புத்ததேவ் தெரிவித்தார். பிற மாநிலங்களைப் போல் மேற்குவங்காளத்திலும் எஸ்.டி, எஸ்.சி, ஒ.பி.சி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இது 7 சதவீதம் ஆகும். தற்ப்பொழுது முஸ்லிம்களுக்கு தனியாக 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால் இந்த சதவீத வரம்பு 17 சதவீதமாக உயர்வதாகவும் அவர் தெரிவித்தார். கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட நிலையிலிலுள்ள முஸ்லிம்களை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்காக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நல கமிஷன், பிற்படுத்தப்பட்டோர் வளர்ச்சி கமிஷன் ஆகியவற்றை உட்படுத்தி கமிட்டி உருவாக்கப்படும்.

கடந்த பிப்ரவரி1-ஆம் தேதி கூடிய இடது முன்னணி கூட்டத்தில் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனின் சிபாரிசுகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. மதத்தின் அடிப்படையில் அல்ல மாறாக முஸ்லிம்களின் சமூக, பொருளாதார பிற்படுத்தப்பட்ட நிலைமையின் அடிப்படையில்தான் இடஒதுக்கீட்டை வழங்கப்போவதாக இடது முன்னணி தலைவர் பிமன் போஸ் தெரிவித்தார்.

கொல்கத்தா மாநகராட்சி, 82 நகராட்சிகளுக்கு வருகிற மே-ஜூன் மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில்தான் இந்த இடஒதுக்கீட்டிற்கான அறிவிப்பு வந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முக்கியக்காரணம் இங்குள்ள முஸ்லிம்கள் இடதுசாரிகளை கைகழுகிவிட்டார்கள் என்று கூறப்பட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

1 கருத்துகள்: on "மேற்கு வங்காளத்தில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு"

பெயரில்லா சொன்னது…

thanks to puddadev

கருத்துரையிடுக